கோச்சடையான் படத்திற்காக வாங்கிய கடனுக்கான நிலுவைத் தொகையை பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கு 12 வாரத்திற்குள் வழங்குமாறு லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை வைத்து அவருடைய மகள் சவுந்தர்யா ரஜினியின் தேய்ந்து போன கை கால் முட்டுக்களில் லைட்டை கட்டி ஆடவிட்டு, கோச்சடையான் 3டி அனிமேஷன் படத்தை இயக்கினார். இந்தப் படமானது 2014 மே மாதம் வெளியானது. படம் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்புப் பணிக்காக ஆட் பீரோ விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு கடன் அளித்திருந்தது. இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது.
கோச்சடையான திரைப்பட உரிமையை வழங்கவும் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ஆட் பீரோ நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ரஜினி அரசியலில் ஆர்வம் காட்டி தமிழக முதல்வராகும் சூழல் உருவானதால் கோச்சடையான் பட உரிமையையும் தராமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்ததோடு லதா ரஜினி வேறு நிறுவனத்திற்கு பட வெளியீடு உரிமை வழங்கப்பட்டதையடுத்து ஆட் பீரோ நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. கடனாக வாங்கிய பணத்தில் ரூ. 8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், எஞ்சிய தொகையைத் தரவில்லை என்றும் ஆட் பீரோ நிறுவனம் குற்றம்சாட்டியது. பெங்களூரைச் சேர்ந்த இந்த நிறுவனம் லதா ரஜினிகாந்த் மீது புகார் அளித்தும் போதிய ஆதாரம் இல்லை என்று ஆட் பீரோ நிறுவனத்தின் மனுவை கர்நாடக ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால் அந்நிறுவனம் உச்சசநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 80 லட்சத்தை லதா ரஜினிகாந்தோ அல்லது மீடியா ஒன் நிறுவனமோ ஜூலை 3ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு தொடரும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இது குறித்து கப்சா நிருபரிடம் லதா ரஜினி போயஸ் இல்லத்தில் கிடா பிரியாணி போடுகிறேன் என்று அழைப்பு விடுத்து, வெறும் சுடுநீர் கொடுத்து அளித்த பேட்டி: என் கணவர் ரஜினி தமிழக சிஸ்டத்தை சரி செய்ய முட்டு கழன்ற ரிட்டையர் வயதில் அரசியலில் ‘தொபுக்கடீர்’ என்று குதித்து தமிழக முதல்வராகி விடுவார் பின்னர் முதல் கையெழுத்திட்டு அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து விடலாம் என்று பகல் கனவில் இருந்தேன். போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்றார், தற்போது தமிழகத்தில் நிலவரம் கலவரமாக இருக்கும் போர்க்கால நிலையில் அமைதி திரும்பட்டும் அரசியல் பிற-வேஷம் செய்கிறேன் என்று ஜகா வாங்கி விட்டார். ‘காலா’ வே என் காலை வாரி விட்டார். நீதிமன்றம் வழங்கிய கடன் கட்டும் தேதியும் காலாவதி ஆகி விட்டது. ஒரு நிமிஷம் என் பாப் ஹேர்கட் தலை சுத்திடுச்சி” என்று ரஜினி ஸ்டைலிலேயே தலையை சிலுப்பு சிலுப்பிக் காட்டினார்.
பகிர்