உயர்திரு நீதியரசரே,
நான் பெரம்பூர் தொகுதி வாக்காளன். தமிழக சபாநாயாகரால் 18 செப்டம்பர் 2017 அன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 ச.ம.உ.க்களின் வெற்றிவேலும் ஒருவர். அது முதலே என் தொகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து புகார் கொடுக்க தகுதியான நபர் இல்லாமல் சிரமத்திற்குள்ளகி உள்ளோம். தமிழகத்தில் நிலவி வரும் கலவர சூழ்நிலை, காவேரிப் போராட்டம், காமக்கொடுமுகி நிர்மலா தேவி லீலைகள் போன்றவற்றால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல், கவுன்சிலரும் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. 83 நாட்கள் காத்திருப்புக்கு பின் எதிர்வரும் கோடைக்காலத்தில் நீதிமன்றங்களும் விடுமுறை விடப்படும் நிலை வரப்போவதால், வேறு வழியின்றி நேரிடையாக நான் உங்களுக்கே கடிதம் எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டேன். மக்கள் நலனைக் காக்கவேண்டியது நீதிமன்றத்தின் கடமை. டாக்டர் ராஜேந்திர பிரசாத் உரையில் இருந்து உங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். “நாம் கட்டமைத்துள்ள ஜனநாயக சமுதாயத்தில், சொந்த விருவெறுப்புகளைத் துறந்து மக்கள் மனதறிந்து, மக்களுக்காக சேவை புரியும் தலைவர்கள் தேவை. எழுத்து மூலம் அர்த்தம் கற்பிக்க இயலாத நல்ல காரியங்களையும், மக்கள் சேவையையும் புரிய நல்ல நடத்தை கொண்ட தலைவர்கள் தேவை. ஆட்சி மக்களுக்காக என்ன கொடுக்கிறதோ கொடுக்க மறுக்கிறதோ, மக்கள் நலன் முழுக்க முழுக்க ஆட்சியாளர்களையே சாரும், ஆட்சியில் குறை இருந்தாலும் நல்ல தலைவர்களால் மக்களுக்கு தரமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்தி தர முடியும். மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், இயந்திரத்தனமாக ஆட்சி புரிவது மக்களுக்கு லாபமில்லை. ஆட்சியாளர்கள் மீது வெறுப்பு தான் மிஞ்சும்.” சுதந்திர காலம் முதலே, போட்டி பொறாமை தான் நமது ஆட்சியாளர்களின் பிரதான குறிக்கோளாக உள்ளது. நமது ஆட்சியாளர்கள் நல்லவர்களல்ல, மக்கள் நலனை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பவும், கஜானாவை காலி செய்வதிலுமே குறிப்பாக இருக்கின்றனர். தங்கள் கடமையை செய்ய ஆட்சியாளர்கள் தவறும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டியது அவசியம். மக்கள் நன்மதிப்பை பெற்று சிறப்பான ஆட்சி நடத்துவதே அரசின் கடமை. வோட்டுப் போட்ட குடிமகனுக்கு செய்யும் நன்றிக்கடன் இதுவே. 18 எம்.எல்.ஏ.க்கல் தகுதி நீக்க நடவடிக்கையும், பின்ன உண்டான களேபரங்களையும், 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்த நாடக காட்சிகளை மக்கள் அறிவார்கள். எம்.எல்.ஏக்கள் நடத்திய குதிரை பேரத்தையும், சுயலாபத்திற்காக அவர்கள் அடித்த கூத்துக்களையும், ரிசார்ட் நாடகங்களையும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய காமெடி நிகழ்வுகளையும் மக்கள் எத்தனை ஆண்டுகளானாலும் மறக்க மாட்டார்கள். ஜனநாயகம் தினசரி படுகொலை செய்யப்படுகிறது. இந்த வேதனையான சூழலில் மக்களை காப்பாற்ற வேண்டிய நீதிமன்றங்களும் கைவிட்டுவிட்டன. சட்டப்பேரவையில் அறுதிபெரும்பான்மையை நிரூபிக்காமல் தொடரும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஜனநாயகப் படுகொலையே! தடம்புரண்ட அரசு மக்களை மோதி சாக அடிக்கிறது. இதை சரிசெய்ய வேண்டிய நீதிமன்றங்கள் செயலற்று இருப்பதால் மக்களிடையை அதிருப்தியும் நம்பிக்கையின்மையும் அதிகரித்துள்ளது. இது குறித்து நிதி கைம் தொடர்புடைய மத்தியப்பிரதேச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “அசாதாரண சூழலில் நீதிமன்றம் தாமாக முன்வந்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி, கேள்வி கேட்கவும் நீதியை நிலைநாட்டவும் தயங்கக் கூடாது. தேவை இருபின் புதிய அதிகாரத்தையும், அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயங்கக்கூடாது.” கணக்கிலடங்கா பொதுநல வழக்குகளும், மனித உரிமை மீறல் குறித்த மனுக்களும், பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்திற்கு புதிதல்ல. தமிழகத்தை கலக்கிய குட்கா ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி. டி.கே.ராஜேந்திரனுக்கும் தொடர்பிருப்பதும், லஞ்சம் வாங்கியதும் நிரூபணமானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை செய்த குட்கா எடப்பாடி ஆட்சிக்கட்டிலை அலங்கரித்ததும் கரைபுரண்டு ஓடியது. வழக்கை சி.பி.ஐ இடம் ஒப்படைக்காமல் இழுத்தடித்தது அரசு. வருமான வரித்துறை கடிதங்கள் தம்மை வந்தடையவில்லை என தமுழக முதன்மை அலுவலர் (அப்போது இருந்த பெண்மணி) பச்சை பொய் சொன்னது நினவிருக்கலாம். குட்கா ஊழல் வழக்கில் ஏற்படும் தாமதம், ஜனநாயகம் என்னும் பெரிய கப்பலை தகர்க்கப் போகும் பெரிய பனிக்கட்டியின் சிறிய துண்டுதான். எப்போதும் நம்பிக்கை இழக்காத எதற்கும் கலங்காத நான் என் தொகுதி பெரம்பூர் மக்களைப்போல் இப்போது நம்பிக்கை இழந்து நிற்கிறேன். 18 எம் எல் ஏக்கல் வழக்கில் ஒரு நல்ல தீர்ப்பும், 2019 டி.கே.ராஜேந்திரன் டிஜிபி பணி முடிவிற்கு பிறகாவது குட்கா வழக்கில் தீர்ப்பும் கிடைக்குமா என ஏக்கத்தில் உள்ளேன். வளர்ச்சிப்பதைக்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழக எதிர்காலத்தை படுகுழியில் தள்ளாமல் காக்குமா நீதி மன்றம்? இறுதியாக நான் கூறிக் கொள்வது, இது எனது விண்ணப்பம் மட்டுமல்ல, 6 மாதங்களாக அடிப்படை வசதி இல்லாமல் அலைக்கழிந்து வரும் 18 தொகுதிகளின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் உள்ளக் குமுறல்.
Verbatim Translation of Savukku article (https://www.savukkuonline.com/13752/)