எஸ்.வி. சேகர் வியாழக்கிழமையன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் தமிழக பல்கலைக்கழகங்கள் குறித்தும் ‘திருமலை சடகோபன்’ என்பவர் பதிவுசெய்திருந்த ஆபாசமான கருத்தை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது இந்தச் செயல் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்திருந்தன. மீன்வளத் துறை அமைச்சர் எஸ்.வி. சேகரை ‘சைபர் சைக்கோ’ என்று குறிப்பிட்டிருந்தார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். பிட்டு காமெடி நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி. சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிந்ததை நீக்கியும் இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்த தான் தெரிவித்த கருத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து எஸ்.வி.சேகர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், நேற்று முகநூலில் திருமலை என்ற நண்பர் எழுதிய கருத்தை படிக்காமல், தவறுதலாக என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விட்டேன். சற்று நேரத்தில் என் நண்பன் அதை படித்துவிட்டு அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக சொன்னான். உடனடியாக அது நீக்கப்பட்டும் விட்டது. அதில் உள்ள கருத்துக்கள், குறிப்பாக பெண்களை தரக்குறைவாக சொல்லக்கூடிய எதையும் நான் ஆதரிக்கவில்லை. அனைத்து பெண்களையும் சகோதரிகளாக பார்க்கும், நடத்தும் குடும்பத்திலிருந்து வருபவன் நான். தனி மனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன். தரம் தாழ்ந்த அரசியலிலோ, பொது வாழ்க்கையில் தரம் குறைந்த தனி மனித விமர்சனங்களிலோ எனக்கு என்றும் விருப்பம் கிடையாது. அதை நான் செய்யவும் மாட்டேன். இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளுக்கும் என் மன்னிப்பை கேட்டு கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தான் நீக்கிவிட்ட பதிவை பத்திரிகை சகோதரிகளுக்கு மன வருத்தம் ஏற்படுத்திய பதிவை இப்போதும் தொடர்ந்து போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எனது கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன் என்றும் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார் இந்நிலையில் ஒரு சில் செய்தியாளர்கள் பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்.வி.சேகர் வீட்டின் முன்பாக கூடி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், அவரது வீட்டின் மீது கற்களை வீசி தாக்கினர். தாக்குதல் மேற்கொண்ட ரவுடி பத்திரிகையாளர்கள் கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இன்று, ஊடகப் பணிக்கு வரும் பெண்கள் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். சவால் நிறைந்த செய்திக் களம், பணி நேரத்தை நீட்டிக்கும் பிரேக்கிங் செய்திகள், இரவு நேர ஷிப்ட் என பெண்களுக்கு என தனிப்பட்ட சலுகைகள் எதுவும் இங்கே இல்லை. தங்கள் அறிவை, உழைப்பை அளித்துதான் ஒவ்வொரு படியும் முன் செல்கிறார்கள். இந்த உண்மையின் சிறுதுளியும் தெரிந்துகொள்ளாத எஸ்.வி.சேகர் என்ற பார்ப்பன பொறுக்கி, தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண்களை இழிவு செய்கிறார்.
இனியும் இதை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டுமா? இது ஊடகத்தில் பணிபுரியும் பெண்களின் பிரச்னை அல்ல. எஸ்.வி.சேகர், அவர்களை மட்டும் கொச்சைப்படுத்தவில்லை. உடன்பணிபுரியும் ஆண்களையும் அவர் இழிவு செய்திருக்கிறார். ஊடக முதலாளிகள் இந்த அடிப்படையில்தான் தங்கள் நிறுவனங்களை நடத்துகின்றனர் என அவர்களையும் இழிவுபடுத்தியிருக்கிறார். எனவே இது நாம் அனைவரும் இணைந்து கூட்டுக்குரலில் கண்டிக்க வேண்டிய பிரச்னை. அங்க இங்க கை வச்சு எங்க கிட்ட வாலாட்ட ஆரம்பிச்சிட்டார் என்று கோபமாக கருங்கல் அடங்கிய சாக்குப்பையுடன் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு புறப்பட்டார் நமது கப்சா நிருபர்.