பேராசிரியை நிர்மலா தேவிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், செல்போன் போன்றவற்றின் விபரங்களை எடுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், நிர்மலா தேவியுடன் பணியாற்றியவர்களை விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்து வருகின்றனர். அதன்படி இன்று நிர்மலா தேவியுடன் புத்தாக்க பயிற்சியில் இருந்த பெண் பேராசிரியையை விசாரித்தனர். மேலும் கரூரை சேர்ந்த ரயில்வே துறை பணியாளர்களான திவான், திவாகர் மற்றும் நிர்மலா தேவிக்கு தெரிந்த நபர்கள் என அனைவரையும் வரவழைத்து விசாரித்தனர்.மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி அளித்த இயக்குநர் கலைச்செல்வன், புத்தாக்க பயிற்சிக்கு சென்ற திருச்சியை சேர்ந்த பேராசிரியையிடமும் சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் நிர்மலா தேவியின் உடல் நலன் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று நடந்த விசாரணையிலேயே இந்த வழக்குக்குத் தேவையான முக்கியத் தகவல் கிடைத்துவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று நடந்த விசாரணையிலேயே இந்த வழக்குக்குத் தேவையான முக்கியத் தகவல் கிடைத்துவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்தும்போது, அவர் முகத்தில் எந்தவித பதற்றமும் இல்லை. சாதாரணமாகத்தான் இருந்தார். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு யோசித்து பதிலளித்தார். அவற்றைப் பதிவுசெய்துள்ளோம். கல்லூரி நிர்வாகம், மாணவிகள், பல்கலைக்கழகம், உயர் கல்வித்துறை என்று விசாரித்தோம். அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில்தான் துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சோதனை நடத்த முடிவுசெய்தோம். உடனடியாக போலீஸ் டீம் அங்கு சென்று சோதனை செய்தபோது, முக்கியத் தகவல்கள், ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதை ஒரு டீம் ஆய்வுசெய்துவருகிறது. அவற்றுள், பல்கலைக்கழக டிகிரிகள் முறைகேடாகக் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன. இருப்பினும், அதற்கும் நிர்மலா தேவிக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்திலும் விசாரணை நடத்திவருகிறோம். பறிமுதல்செய்யப்பட்ட ஆவணங்கள்குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ஆய்வின் முடிவில்தான் முழு விவரம் தெரியவரும். இதற்கிடையில், பல்கலைக்கழகத்தில் உள்ள முக்கியமானவர்களுடன் நிர்மலா தேவிக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு இருந்துள்ளது. அவர்கள் யார் என்று இப்போதைக்கு வெளியில் சொல்ல முடியாது. ஏனெனில், அவர்களின் பெயர்கள் வெளியானால் விசாரணை வளையத்திலிருந்து அவர்கள் தப்பிவிட வாய்ப்புள்ளது. நிர்மலா தேவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ளோம். அவர்களில் இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர். இதனால், அவர்கள் மீதான எங்களின் சந்தேகம் வலுத்துள்ளது. அவர்கள் எங்கு சென்றாலும் எங்களது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியாது. நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை ,சென்னை தலைமையிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயரதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறது. அரசியல் தலையீடுதான் இதற்கு முக்கிய காரணம். பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரத்துக்குப் பிறகு, பல்கலைக்கழகத்தின் மீதிருந்த மரியாதை போய்விட்டது. நிர்மலா தேவியை அடிக்கடி பல்கலைக்கழகத்துக்குள் பார்த்துள்ளோம். அப்போதெல்லாம் அவர்குறித்த பின்னணி எங்களுக்குத் தெரியாது. இப்போதுதான் அவர்குறித்த தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளோம். டிகிரி சான்றிதழில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால், அதற்கும் நிர்மலா தேவிக்கும் தொடர்புள்ளதா என்று உடனடியாகப் பதில் சொல்ல முடியாது! ஆனால், பல்கலைக்கழகத்தில் முறைகேடாக டிகிரி வாங்குவதற்கு தனி ரூட் உள்ளது. பல்கலைக்கழகத்தில் பணியிலிருப்பவர்கள்மூலம் புரோக்கர்கள் டிகிரிகளைக் கூவிக் கூவி விற்ற சம்பவங்களும் நடந்துள்ளன. அவர்களுக்கும் நிர்மலா தேவிக்கும் தொடர்பு இருக்குமா என்று போலீஸ் தரப்புதான் விசாரித்து ஊர்ஜிதப்படுத்த வேண்டும். இதற்கிடையே தொடர் விசாரணையால் உடல் நலமில்லாமல் போனார் நிர்மலாதேவி. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவர்கள் நேரில் வரமுடியாது என்பதால் நிர்மலாதேவியை போலீஸ் பாதுகாப்புடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.