பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தி பதிவு போட்ட பாஜகவின் நடிகர் எஸ்.வி. சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பெண் செய்தியாளர்களை மிக மோசமாக இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவை பகிர்ந்திருந்தார் எஸ்.வி.சேகர். படுக்கையை பகிர்ந்தால் தான் நிருபர் ஆக முடியும், ஊடகங்களில் பெண்கள் செய்தி வாசிப்பாளர்கள் ஆக முடியும் என்ற தொனியில் அது இருந்தது. இது பெண் நிருபர்கள், செய்தி வாசிப்பாளர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த பதிவை எஸ்.வி.சேகர் நீக்கியிருந்தார். பின்னர் படிக்காமல் பார்வர்டு செய்துவிட்டேன் என காரில் வீடியோ எடுத்து மன்னிப்பும் கேட்டார். எஸ்.வி.சேகருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சென்னை போலீசார் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வராமல் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது; எஸ்.வி. சேகரை கைது செய்யவும் தடை விதிக்க முடியாது என கூறி கோடைகால நீதிமன்றத்துக்கு முன்ஜாமீன் கோரும் மனுவை மாற்றி உத்தரவிட்டார். இதனால் எஸ்.வி. சேகர் எந்த நேரத்திலும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. எஸ்.வி.சேகர் மீது கரூர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தலித் பாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான வரும் 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கன்னத்தில் தட்டியதற்கு தமிழக எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். கரூர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் என்பவர் எஸ்.வி சேகர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற ஏப்ரல் 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனால் எஸ்.வி. சேகர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் எஸ்.வி. சேகரின் உறவினர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். அதனால் எஸ்.வி.சேகரை போலீஸ் கைது செய்யுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. எஸ்.வி. சேகர் ரஜினியின் பூர்வீகமான கர்நாடகாவில் காவிரித் தண்ணீர் குடித்துக் கொண்டு பெங்களூருவில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக போலீஸ் நினைத்திருந்தால் எஸ்.வி. சேகரை எப்போதோ கைது செய்யதிருக்க முடியும். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நீதிமன்றமே கைது செய்ய தடை இல்லை என கூறிவிட்ட நிலையில் இனியாவது எஸ்.வி. சேகர் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஜாமீன் வழக்கு ,செக் மோசடி வழக்கு ,பொண்டாட்டிக்கு கட்டிட வாடகை வழக்கு, மருமகனுக்கு அப்பா அம்மா வழக்கு. உங்க சிஸ்டம் ரொம்ப நல்ல இருக்கு வருங்கால தமிழக முதல்வரே என்றார் கப்சா நிருபர். இதற்கிடையே ரஜினிகாந்த் திரைப்பட பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூன் மாதம் 6ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல திரைப்பட பைனான்சியர் முகன்சந்த் போத்ரா, இயக்குநர் கஸ்தூரிராஜா மீது காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார்.  வழக்கு விசாரணையின்போது, கஸ்தூரிராஜா தான் வாங்கிய கடனுக்கு அவரது சம்பந்தி உறவான நடிகர் ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்ததால்தான் கடன் கொடுத்ததாக போத்ரா கூறியிருந்தார். இதையடுத்து,  பொய்க்காரணங்கள் கூறி போத்ரா தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக ரஜினிகாந்த் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டார். ரஜினியின் இந்த  குற்றச்சாட்டு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக போத்ரா,  ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பின்னர் போத்ரா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தார்.  வழக்கு விசாரணைக்கு போத்ரா ஆஜராகாததைக் காரணம் காட்டி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார் போத்ரா. இந்த கோரிக்கை மனுவை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். விசாரணைக்கு பின்னர், ரஜினிகாந்த்துக்கு எதிரான அவதூறு வழக்கை மீண்டும் ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் முறையாக விசாரிக்க வேண்டும். இந்த விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று உத்தரவிட்டார். ஆனால், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் ஒளிந்திருப்பதால் ரஜினிக்கு தொடர்பு இருக்குமோ என சந்தேகம் உள்ளது. என்றார் கப்சா நிருபர்.

பகிர்