கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல்தலைவர் ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரியாணி, வறுத்த மீனுடன் மதிய உணவு சாப்பிட்டார். காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்து இது தொடர்பாக அவர் கலந்து ஆலோசித்தார். இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துவதற்காக சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரம் சென்ற அவரை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்கு திமுக தலைவர் ‘சப்ஜெக்ட்’ கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் சந்திரசேகர ராவ். இதைத்தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தனது குடும்ப உறுப்பினர்களை ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இதனை அடுத்து, சந்திரசேகர் ராவுக்கு நல்ல ஓட்டலில் இருந்து பிரியாணி, வறுத்த மீனுடன் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. ஸ்டாலினுடன் சேர்ந்து சந்திரசேகர ராவ் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, (மூன்றாம் கலைஞர்) உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து ஸ்டாலினுடன், சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் ஆக துப்பில்லை என்று திட்டிய துர்காவிடம் கோபித்துக்கொண்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டே விவாதித்தோம் என தெலுங்கானா முதல்வருடன் நடந்த சந்திப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார் என கப்சா நிருபர் தெரிவித்தார். எதிர்வரும் அரசியல் சூழலை எப்படி அணுகுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவை குறித்தும் பேசினோம். மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை நடத்துமாறு தெலுங்கானா முதல்வரிடம் கோரியுள்ளோம் என ஸ்டாலின் கூறியுள்ளார். சாகிற நேரத்தில் தான் சங்கரா சங்கரா என்று சொல்வோம் – அதாவது தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 3-வது அணியையோ, 4-வது அணியையோ பற்றி ஸ்டாலினுடன் பேசவில்லை என்று முதல்வர் சந்திரசேகர ராவ் விளக்கமளித்துள்ளார். ஸ்டாலினை தாம் சந்தித்து பேசியது அரசியல் அணி சேர்க்கைக்காக அல்ல என கூறியுள்ளார். இந்தியா மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். சந்திப்பை அரசியலாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் மாநிலங்களுக்கான உரிமையை பெறுவோம் அதில் பின்வாங்க போவதில்லை. 2004ல் நான் இங்கு வந்தபோது, திமுக தலைவர் கருணாநிதி அரசியல் நிலவரம் குறித்து எனக்கு கற்பித்தார். தென் மாநிலங்களின் குரலாக ஒலிக்கும் பேசாமடந்தை ‘சப்ஜெக்ட்’ கருணாநிதியை நினைத்து பெருமை என முதல்வர் சந்திரசேகர ராவ் பேட்டியளித்துள்ளார்.
பகிர்