ஜெயலலிதா மரணத்திற்கு பின் முதலமைச்சருக்கான போட்டியில் வேறு சிலரும் இருந்தனர் ஆனால் அவர்கள் பெயரை கூற நான் விரும்பவில்லை என திவாகரன் கூறினார். அவர்கள் பெயரை வெளியிட்டால் கொடநாடு எஸ்டேட் காவலாளி ராம்பகதூர் தான் ஏற்படும். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் முன் சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் 3 மணி நேரம் நடந்த விசாரணை முடிவடைந்து வெளியே வந்த திவகாரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை. அவரது மரணம் இயற்கையாகவே நடந்தது. ஆனால், டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. மருத்துவ முறையில் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதியே உயிரிழந்தாலும் உயிரியல் ரீதியாக அறிவிக்க தாமதம் ஏற்பட்டது. அப்போது எம்பார்மிங் செய்து உடலை பத்திரப்படுத்தி வைத்திருந்தோம்.
பொய்யான ரிப்போர்ட் மற்றும் இதர ஏற்பாடுகளுக்கு பிறகு ஜெயலலிதா இறப்பை நல்ல நேரம் ராகு காலம் பார்த்து, அறிவித்தோம் ஜெயலலிதா மரணம் அடைந்த போது முதலமைச்சருக்கான போட்டியில் வேறு சிலரும் இருந்தனர். அவர்களது பெயரைக் கூற விரும்பவில்லை என்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான திவாகரன் கூறியுள்ளார். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கூறியுள்ளார். அரசியல் ஈடுபாடு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தேன். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆறுமுகசாமியிடம் தெளிவாகக் கூறியுள்ளேன் என்று தெரிவித்தார். இப்போது தான் அம்மா அணி ஆரம்பித்துள்ளேன் விரைவில் சின்னம்மா அணி, அத்தை அணி, சித்தப்பா அணி என்று சேர்த்துக் கொண்டே போவேன் என்றார். முன்னதாக ஜெயலலிதா பிணம் போன்ற பொம்மையை சவப்பெட்டியில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் ஓட்டுக் கேட்க முயன்றதும், மக்கள் எதிர்ப்பால் பின்னர் சவப்பெட்டியை திரும்ப எடுத்துச் சென்று ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதும் நினைவிருக்கலாம். முதலில் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆர்.கே.நகர் மக்கள் ஜெயலலிதாவின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டதாகவே நினைத்தனர். பின்னர்தான் அது பொம்மை ஜெயலலிதா என்றும், நூதனமான பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா போன்ற பொம்மையை ஏற்பாடு செய்து அதை சவப்பெட்டியில் வைத்துள்ளதும் தெரிய வந்தது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல இந்த பிரச்சாரம் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இந்த அணுகுமுறையால் அதிருப்தி அடைந்தனர். மேலும் ஜெயலலிதா உருவபொம்மை மீது உள்ள தேசியக்கொடியை அகற்ற வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ்அணியினருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியாதாகவும் செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியூட்டின.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இதில், வேட்பு மனுத்தாக்கலின்போது அளிக்கப்படும் பி ஃபார்மில், பொதுச்செயலாளர் என்ற இடத்தில் ஜெயலலிதாவின் கைநாட்டு இடம்பெற்றிருந்தது. இதைப் பற்றி அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோதும், ‘அவரால் கையெழுத்துப் போட இயலவில்லை’ என்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அப்போதும் ஜெ பிணத்தை வைத்து அதிமுகவினர் அரசியல் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
பகிர்