மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின்(47) உயிர்பலியுடன் முடிவடைந்துள்ளது. திருத்துறைபூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்றார். அவருடன் தந்தை கிருஷ்ணசாமி சென்றிருந்தார். இன்று காலை மகன் தேர்வு மையத்துக்கு சென்ற பின்னர் விடுதியில் இருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பக்கத்து அறையில் இருந்த நபர் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் கிருஷ்ணசாமியின் உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியாகின. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பசுமலை தேர்வு மையத்திற்கு மாணவி ஐஸ்வர்யா உடன் அவரது தந்தை கண்ணன் வந்திருந்தார். மகள் தேர்வு எழுதி முடிக்கும் வரை தந்தை கண்ணன் தேர்வு மைய வளாகத்தில் காத்திருந்தார். பிறகு தேர்வு முடிந்த பிறகு ஐஸ்வர்யா மற்றும் அவரது தந்தை கண்ணன் இருவரும் சிவகங்கை சிங்கம்புணரி பகுதியில் உள்ள தங்களது வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது கண்ணனுக்கு மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டது. அதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
சென்னை கோபாலபுரத்தில் நீட் தேர்வு மையங்களில் மாணவர்களின் பூணூல் அறுக்கப்பட்டதால் பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர். நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு தொடங்கியது. காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு சிபிஎஸ்இ வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் கையில் கட்டியுள்ள சாமி கயிறுகளை பிளேடாலும், கத்திரிகோலாலும் அறுத்தெறிந்தனர். அதுபோல் மாணவிகள் அணிந்திருந்த துப்பட்டாவுக்கு அனுமதி இல்லை. இதனால் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் தேர்வு எழுத வந்த மாணவர்களை சோதனை செய்த போது அவர்களில் சிலர் பூணூல் அணிந்திருந்தனர். இதையடுத்து அவையும் அறுத்தெறியப்பட்டன. இதனால் பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர். மத்திய அரசு அராஜக போக்கையே கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். கண்ணூர் கேரளாவில் 18 வயது மாணவி ஒருவரின் ‘பிரா’ வில் இருந்த இரும்பு கொக்கி மெட்டல் டிடக்டரில் ஒலி எழுப்பியதால், அதை கழற்ற சொல்லி தேர்வு எழுதிய மாணவி நேரமின்மையால் கழற்றி கட்டாயப்படுத்திய கொடூரமும் அரங்கேறியது.

ஜீன்ஸ் அணிந்து வந்த ஒரு மாணவரின் பேண்டில் இருந்த இரும்பு ரிவெட்டுகளையும் பிளேடுகளை வைத்து தேர்வர்கள் கிழித்து அப்புறப்படுத்தினர். இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த கப்சா பேட்டியில் கூறியிருப்பதாவது: “தமிழக கிராமப்புற, ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அவர்களின் எதிர்காலத்துடன் கொடூர ஆட்டம் ஆடி வரும் நீட் தேர்வினால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நீட் தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் ஒதுக்கி, தமிழக மாணவர்களையும் அவர்களுக்குத் துணையாக சென்ற பெற்றோரையும் அலைக்கழிக்கச் செய்து, மன உளைச்சலுக்குள்ளான கொடூரத்தால் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியை இந்த ஆண்டு பறிகொடுத்துள்ளோம். திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால், மாணவரும் அவரது தந்தையும் மன உளைச்சலுக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், எர்ணாகுளம் நாளந்தா பள்ளியில் நீட் தேர்வை அந்த மாணவர் எழுதிக் கொண்டிருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் அவரது தந்தை கிருஷ்ணசாமி. பெரியார் சிலைகள் உடைப்பு மற்றும் எச். ராஜா பேச்சால் சர்ச்சையின் போது திருவல்லிக்கேணி பகுதியில் சிலரின் பூணூலை அறுத்தார்கள் அது எப்படி பாராட்டப்பட வேண்டிய செயலோ, அது போல் இதுவும் போற்றப்பட வேண்டியது தேர்வு எழுதும் போது பூணுல் ஆணியக்கூடாது என்று சொன்னது, திமுக கொள்கைகளை தூக்கிப்பிடிக்கிறது. அடுத்த கூட்டணி பாஜகவுடன் தான். அதேபோல் கறுப்புக் கொடி போராட்டத்தின் போது இடுப்புகிள்ளி திமுக ட்ரெண்டானது போல் பெண்களின் துப்பட்டாவை உருவியது போற்றுதலுக்குரியது. இரண்டு மாணவர்களின் பெற்றோர் இறந்தது திமுக செய்த தமிழின படுகொலையை ஒப்பிடும்போது ஒன்றும் பெரிதல்ல” என்றார்.