கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஏற்கனவே அறிவித்தது. இந்த மண்டபம் கட்டுவதற்காக சுமார் ரூ.50.80 கோடியில் அளவில் டெண்டா்கள் விடப்பட்டன. 36,806 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ50.08 கோடி செலவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைகிறது. முன்னாள் முதல்வர் பிப்ரவரி 21ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டது. இதில், கிருஷ்ண மூர்த்தி அன் கோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. ஜெயலலிதா நினைவிட வளாகம் அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் மாநகராட்சி, சிஎம்டிஏ, சுற்றுச்சூழல் துறை, கடற்கரை ஒழுங்குமண்டலத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. இதில், மார்ச் 19ம் தேதி சிஎம்டிஏவும், 21ம் தேதி மாநகராட்சியும், மார்ச் 16ம் தேதி கடற்கரை ஒழுங்குமுறை மண்டலமும், சுற்றுச்சூழல் துறையும் அனுமதி கொடுத்துள்ளன. இந்த நினைவிட திட்டத்துக்கு நிலத்தடி நீரை உறிஞ்ச கூடாது, இடிக்கப்படும் கழிவுகளை கொட்டக்கூடாது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் உட்பட 9 நிபந்தனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.ஜெயலலிதா நினைவிட வளாகம் 36,806 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. இதில், 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த படங்களின் கவர்ச்சி ஸ்டில்கள் அடங்கிய அருங்காட்சியகமும், 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அறிவுசார் மையமும், 9 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் செடிகள், புற்களை கொண்ட பசுமை பகுதியும், 1927 சதுர மீட்டர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடமும், 9 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் நடைபாதைகள், 1260 சதுர மீட்டரில் நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நினைவிடம் 15 மீட்டர் உயரத்தில் இருக்கும். 2600 சதுர மீட்டர் பரப்பளவில் எம்ஜிஆர் அருங்காட்சியகமும் அமைகிறது. இந்த நினைவு வளாக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னதாக, எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் சிறப்பு யாகம் நடந்தது. இந்த யாகத்தில் அடிக்கல் நாட்டு விழாவுக்கான கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடா்ந்து இன்று காலையில் மொரினாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள் காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணத்திற்கு தயாரான இளஞ்சோடிகள் போல் பட்டு பீதாம்பர ஆடைகளுடன் பரிவட்டம் கட்டி பங்கேற்றனர். எதிர் எதிர் துருவங்களாக ஒருகாலத்தில் இருந்தவர்கள் திருமண தம்பதிகள் போல இருவரும் அமர்ந்திருந்தது தொண்டர்கள் மத்தியில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. மாப்பிள்ளை தோழர்களாக அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இருவருக்கும் ஹனிமூன் செல்ல நீட் தேர்வு நடைபெற்ற ராஜஸ்தான் ஜெய்ப்பூர் செல்ல விமான டிக்கட்டுகளை வழங்கி மணமக்களை வாழ்த்தினர். ஏனிந்த அவசரம் என்று கப்சா நிருபர் விசாரித்ததில், கிராமங்களின் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்தால், மழைவரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுபோல் முதல்வர் துணைமுதல்வர் இருவருக்கும் திருமணம் நடப்பது போல் ஒர செட்டப் செய்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமையவும், காவரியில் கப்சா தண்ணீர் வரவும் வழி பிறக்கும் என்று இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக செய்தி கிடைத்தது.

பகிர்