நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வின் போது பல்வேறு கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நீட் குளறுபடி காரணமாக விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கும், சிபிஎஸ்இ ஆணையத்துக்கும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. நீட் தேர்வு எழுத தமிழகத்தில் உள்ள 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ராஜஸ்தான், சிக்கிம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். அப்போது வெளிமாநிலங்களில் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு நடத்த 2 நாட்களே மிஞ்சியதால் தேர்வு மையங்களை மாற்றுவது சிரமம் என்று கூறிய சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சிபிஎஸ்இ ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்கியது. இதையடுத்து நேற்று நாடு முழுவதும் 2255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 13 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு மையத்தில் சிபிஎஸ்இ அதிகாரிகள் மாணவர்களிடம் நடந்து கொண்ட விதத்தால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது. தீவிரவாதிகளை போல் மாணவர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தியதும், காதுகளுக்கு ஏதேனும் கருவிகள் இருக்கின்றனவா என சரிபார்க்க டார்ச் லைட் அடித்து பார்த்ததும், மாணவிகள் துப்பட்டா அணிந்து வரக் கூடாது உள்ளிட்டவற்றால் மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் வேதனை அடைந்தனர். தேர்வு மையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்து.

School Staff checking the applicants before entering for NEET Exam 

மேலும், மாணவிகளின், தலைகளில் போடப்பட்டிருந்த ஹேர் பேண்டுகள் எடுக்கப்பட்டன. அதேபோல, மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த கயிறுகள், ஸ்டைல் பேண்டுகள், பெல்ட்டுகள் போன்றவைகளும் எடுக்கப்பட்டன. குறிப்பாக, தேர்வு எழுத வந்த மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட் அடித்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், மாணவிகளுக்கு இந்த சோதனை நடத்தப்படவில்லை. நுழைவுத் தேர்வுகளையும், தேர்வு களையும் நடத்துவதன் மூலமே இன்று கல்வி நிறுவனங்கள் பல கோடிகளைக் குவிக்கின்றன. இதற்கு சிபிஎஸ்இ அமைப்பும் விலக்கல்ல. அது நீண்டகாலமாக அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நடத்திவந்ததன் மூலம், கோடிக்கணக்கான ரூபாயை வருவாயாக ஈட்டிவந்தது. தற்போது நீட் தேர்வின் மூலமும் வருவாய் ஈட்டிவருகிறது. தவிர, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் என்ற பெயரில் நடக்கும் வியாபாரத்துக்கான பெரிய லாபியும் இதன் பின்னணியில் உள்ளது. விளைவாகவே, நுழைவுத் தேர்வுகளில் மாணவர்களின் வசதி கணக்கில் கொள்ளப்படாமல், நிறுவனங்களின் லாபம் பிரதானமாகக் கொள்ளப்படுகிறது. இதை இப்படிப் பார்க்கலாம்: ‘கூடுதல் மையங்கள் = கூடுதல் செலவு. குறைந்த மையங்கள் = கூடுதல் லாபம்.’ தமிழக மாணவர்கள் வெளியே செல்ல நேர்ந்ததன் விளைவாக இந்த விஷயம் வெளிப்பட்டிருக்கிறது. ஒருவேளை, தமிழகத்துக்குள்ளேயே வெளிமாநிலத்துக் கான மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால், இந்தப் பிரச்சினை வெளியிலேயே வந்திருக்காது. மையங்களில் முடிந்த அளவுக்கு மாணவர்களை அடைப்பதே இன்றைய வழக்கம். ஒவ்வொரு இடத்திலும் அதிகமான ஆட்களை அடைப்பதன் வாயிலாகவே கண்காணிப்பு என்ற பெயரில் அதீதமான கட்டுப்பாடுகளும் உள்ளே நுழைகின்றன. நுழைவுத் தேர்வுக்குப் பின்னுள்ள வணிகம்: சேவைத் துறையில் வணிக வாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதார நடவடிக்கைகள் கோலோச்சும் நிலையில், இன்று நுழைவுத் தேர்வுகளை நடத்துவது, அதற்கான பயிற்சிகளை வழங்குவது, பயிற்சிகளுக்கான குறிப்பேடுகளை, மென்பொருட்களை உருவாக்குவது போன்றவை சர்வதேச வர்த்தகம் ஆகிவிட்டன. அதன் காரணமாகவே புதுப் புது தேர்வுகள் புகுத்தப்படுகின்றன. முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் நுழைவுத் தேர்வு’ நடத்தும் பொறுப்பு, ஒரு அமெரிக்க நிறுவனத்திடமும், பல தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைக்கப்பட்டிருப்பதை இங்கே சுட்டிக்காட்டலாம். தேர்வுகள் நடத்துவதில் இன்று ஏகபோக அமைப்புகள் உருவாகிவருகின்றன. அரசு நிறுவனங்கள், பல சிறிய தனியார் நிறுவனங்கள் நடத்திவந்த தேர்வுகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்படுகின்றன. இந்த நோக்கத்துக்காகவே, மத்திய அரசு தேசியத் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் வழங்க முயல்கிறது. அந்த அமைப்பு செயல்படத் தொடங்கினால், அந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் பேருக்கு வெவ்வேறு படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பும் சிபிஎஸ்இயிடமிருந்து பறிக்கப்படும். திருவாரூர் மாவட்டம் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மையத்தில் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் தேர்வு எழுத சென்றார் மகாலிங்கம். அப்போது மகனை தேர்வு எழுதும் அறையில் விட்டு விட்டு விடுதிக்கு வந்த கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர் மட்டுமல்லாமல் நீட் எனும் அரக்கனால் சிவகங்கை மாணவி ஐஸ்வர்யா, கடலூர் மாணவி சுவாதி ஆகியோரின் தந்தைகளும் மனஉளைச்சலால் உயிரிழந்தனர். பத்திரிகை செய்திகளை ஊடகத்தில் பார்த்த தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து சிபிஎஸ்இ ஆணையத்துக்கும், தமிழக தலைமை செயலாளருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த கெடுபிடிகளுக்கு பின் விரைவில் கட்சி தொடங்க உள்ள எந்திரன் ரஜினி, விசில் சின்னத்தில் போட்டியிட டுவிட்டரில் மட்டும் சீட்டி அடித்துக் கொண்டிருக்கும் மய்யம் அப்பு கமல் இருவரது திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கமே காரணம் என கப்சா நிருபர் கண்டறிந்துள்ளார். எந்திரன் திரைப்படத்தில் சிட்டி ரோபோ கதாபாத்திரம் கதாநாயகி ஐஸ்வர்யா ராய்க்கு டிரன்ஸ்மிட்டர் மூலம் டப்பா அடித்த மெடிக்கல் பாடங்களை படித்து காப்பியடிக்க உதவுவதாக காட்சி அமைப்பு வரும். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஒரு படி மேலே போய் பிரபல ரவுடி மருத்துவ நுழைவு தேர்வில் கேள்வித்தாள் அமைப்பாளரை மிரட்டி புளூடூத் ஹெட்செட் மூலம் 98 மார்க் வாங்கி மருத்துவ சீட் பெறுவது போல் காட்சி வரும். இவ்விரு படங்களையும் செலவில்லாம தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் பார்த்த சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் மோடி அனுமதியுடன் இந்த சடை கத்தரிப்பு, முடிச்சவிழ்ப்பு, ஆடை கிழிப்பு, உள்ளாடை நீக்கம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த நீட் பயிற்சி நிறுவன உரிமையாளர் அஸ்வினி, ஆர்த்தி ஆகியோர் மீதும், முறைகேட்டுக்கு தரகராக செயல்பட்டதாக மோகித் குமார், மனோஜ் சிக்கா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவச் சீட்டு வாங்கித் தருவதாக கூறியிருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இன்னும் ரிசல்டே வரவில்லை அதுக்குள்ள மெடிக்கல் சீட்டா என்று அதிர்கின்றனர் மெரிட் மாணவர்கள்.

பகிர்