ரஜினியின் அடுத்த படமான ‘காலா’ படப் பாடல்களை விமர்சித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசிய பேச்சு கோட்டை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதுகுறித்துப் பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் கருவாடு ஜெயக்குமார், தன்னுடைய திரைப்பட பாடல்களில் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்தினார் எம்.ஜி.ஆர். லதா மஞ்சுளா போன்ற இளம் நடிகைகளின் கன்னத்தில் எமரி ஷீட் போட்டு தேய்த்து டூயட் பாடினாலும், சினிமாவில் அவர் மது, புகை பிடித்தது கிடையாது. சட்டம், ஒழுங்கு பிரச்சனையின்றி அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்தநிலையில், திடீரென ஞானம் வந்ததுபோல, நடிகர் ரஜினிகாந்த் விழித்தெழுந்தது போன்று பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதை அரசியல் ஆதாயமாகத்தான் பார்க்கிறோம். கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள பாடல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பாடல்கள் மூலம் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காலத்தால் அழியாத பாடல்கள் பல இருக்கும்போது காலா பாடல்கள் மழையில் முளைத்த காளான்கள் போல காணாமல் போகும்’ என விமர்சித்தார். இந்தக் கருத்து அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவினரைப் பொறுத்தவரையில், ரஜினியை அரசியல்ரீதியாக எதிர்ப்பதைத்தான் விரும்புகிறோம். காலா படத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை முன்வைக்கிறார் அதன் இயக்குநர். நேற்று வெளியிடப்பட்ட பாடல்களிலும் அதன் தொனி தென்படுகிறது. இதை நேரடியாக விமர்சிக்கும்போது, அந்த சமுதாய மக்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியது வரும் என முதல்வர் தரப்பில் நினைக்கின்றனர். இதைப் புரிந்து கொள்ளாமல், காலா படப் பாடல்களை விமர்சித்தது எந்த வகையிலும் சரியானதல்ல என்பதுதான் முதல்வர் தரப்பின் நிலைப்பாடு என்கின்றனர். இதற்கிடையே மூதாட்டிகளின் கோபத்தை சம்பாதிக்கும் விதமாக தென்னகத்து ஐன்ஸ்டீன் தெர்மாகோல் செல்லூர் ராஜூ சர்ச்சையை கிளப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த், காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாமே தவிர தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது என்று, அமைச்சர் செல்லூர் ராஜு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். காலா திரைப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ரஜினிகாந்த், தென் இந்திய நதிகளை இணைப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்றார். நதிநீர் இணைப்பு நடந்துவிட்டால், தான் கண்மூடினாலும் கவலையில்லை என உருக்கமாக பேசியிருந்தார் ரஜினிகாந்த். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ரஜினிகாந்த் பேசியுள்ளது பற்றிய உங்கள் கருத்து என்ன, நதி நீர் பற்றி பேசி, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க ரஜினிகாந்த் முயல்கிறாரா என்ற நிருபர் கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “ஆட்சியை பிடிப்பதெல்லாம் முடியாது, காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாமே தவிர, தமிழக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் இருக்கிறது” என்றார். காரைக்குடி உள்ளிட்ட செட்டிநாடு பகுதிகளில், ஆச்சி என்பது மூதாட்டிகளை குறிப்பிட்டு அழைக்கும் பெயராகும். விவேக் ஒரு திரைப்படத்தில், “ஆட்சியா, ஆச்சியா, காரைக்குடி பக்கம் கேட்டாங்கன்னா பெரிய கலவரமே வந்துரும்டியேய்” என்று கூறியிருப்பார். எனவே, செல்லூர் ராஜுவின் கருத்து பெண்களை இழிவு செய்வதை போல உள்ளதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். வைகை அணையில் உள்ள தண்ணீர், ஆவியாகாமல் இருக்க தெர்மாக்கோலை போட்டு மூட முயன்று கடந்த வருடம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானவர் செல்லூர் ராஜு என்பது நினைவுகூறத்தக்கது. ரஜினி தனது படங்களில் தனது சொத்துக்களை ஏழை எளியவர்களுக்கு எழுதி வைத்து விட்டு காலில் செருப்பு கூட இல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தங்குவார். அங்கு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கல் இருப்பது தெரிந்ததும் மிகப்பெரும் பணக்காரர் ஆவார் – இது படையப்பா. முத்து என்ற படத்தில் முதலாளியை நாடகக் காரிக்கு கூட்டிக் கொடுத்து அவரது சொத்துக்களுக்கு அதிபதி ஆவார். சிவாஜி படத்தில் மருத்துவமனை, கல்லூரி கட்ட வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை செலவு செய்துவிட்டு வில்லனிடம் ஒரு ரூபாய் பிச்சை வாங்குவார். பின்னர் கட்டப்பஞ்சாயத்து செய்து மற்றவர் பணத்தை பிடுங்குவார். பாட்ஷா படத்தில், முஸ்லிம் தீவிரவாதியாக மதம் மாறி கொலை கொள்ளை செய்து விட்ட ஒரு அடியாட்கள் கூட்டத்துடன் சென்னையில் ஆட்டோ டிரைவர் வேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்வார். எந்திரன் படத்தில் ஒரு படி மேலே போய் அனு ஆயுத கருவிகளை செய்து உலகிற்கு அச்சுறுத்தல் அளிப்பார். கபாலில் மலேசிய மக்களுக்கு போராடி டிக்கட் விலையை ஒரேயடியாக 2000 ரூபாய் வைது விற்று தமிழர்களை வஞ்சித்தார். தனது கதாபாத்திரங்களை தேர்வி செய்வதிலேயே இவ்வளவு குயுக்தியை காட்டும் ரஜினி தமிழகத்தின் முதல்வார் ஆனால் தற்போது உள்ள ஆபத்துகளை விட பன்மடங்கு பேராபத்துக்கள் தமிழகத்திற்கு நடக்கும், தமிழகமே இந்த கோமாளியால் ஒரு சோமாலியாவாக மாறிவிடும் என்கிறார் கப்சா நிருபர்.

பகிர்