திருப்பதியில் சாமி கும்பிடச்சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிரில் சாமி ஆடிய பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு போலீஸார் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தாருடன் சேலத்திலிருந்து திருப்பதி திருமலைக்கு சாமி கும்பிட வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். அதிகாலையில் வராக சுவாமி, ஹயக்ரீவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். வராக சாமி கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு லட்சுமி நரசிம்மன் கோயிலில் தனது குடும்பத்தாருடன் எடப்பாடி பழனிசாமி சாமி கும்பிட்டார். அப்போது அவருக்கு சன்னிதானம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. முதல்வர் அருகில் அவரது மனைவி, மகள் உள்ளிட்டோர் சாமி கும்பிட்டனர். சில பக்தர்களும், பாதுகாவலர்களும் உடனிருந்தனர். அப்போதுதான் “என்னடா இது தமிழ்நாட்டு சாமிக்கு வந்த சோதனை” என்பது போலவே திருப்பதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேர்ந்த சம்பவம் அவரின் குடும்பத்தாரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் பழனிசாமி சமீபகாலமாக கோயில் வழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். பழனிசாமி தன்னைத்தானே கடவுள் என்று கூறும்படியான விளம்பரம் தியேட்டர்களில் வெளியான நாள் தொடங்கி அவரை சுற்றிய சர்ர்சை வட்டம் போட தொடங்கியது. எந்த முதல்வரும் தன்னைத்தானே கடவுள் என்று விளம்பரம் செய்துக் கொள்ளமாட்டார் என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். போதாத குறைக்கு நெட்டிசன்கள் ஒரு பக்கம் மீம்ஸ், ட்ரோல் வீடியோவால் கடவுள் பழனிசாமி விளம்பரத்தை ஒரு கை பார்த்தனர். இந்நிலையில், தான் அந்த விளம்பர நிறுத்தப்பட்டது. அதன் பின்பு, நேற்று 14.5.18 எடப்பாடி குடும்பத்துடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். தமிழ்நாடு முதல்வர் திருப்பதி கோயிலுக்கு வருவதையொட்டி அங்கு அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பழனிசாமி சாமி கும்பிடும் போது, தமிழ்நாட்டை சீரழிச்சிட்டியே எடப்பாடி…” என்று கத்தியபடி பக்தர் சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. புரோகிதர் போல் இருந்த அந்த பக்தர் திடீரென ஆவேசமாக பயங்கரமாக கூச்சலிட்டார். இதைப் பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாமி வந்து உடலெல்லாம் பதற ஆட்டம் போட்ட அந்த பக்தரை எடப்பாடி பழனிசாமியும், அவரது மனைவியும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். உடனடியாக செயல்பட்ட பாதுகாவலர்கள் அந்த பக்தரை சூழ்ந்துகொண்டு ஆசுவாசப்படுத்தினர். அப்போது சாமி வந்து உடலெல்லாம் பதற ஆடிய அந்த பக்தர் திமிறினார். ‘நான் சாமி வந்திருக்கேன்டா, எடப்பாடியை என்னை வந்து பார்த்து விட்டு போகச்சொல்லுடா’ என்று கோஷமிட்டார். அப்போது எடப்பாடி இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனடியாக அவரைப் பாதுகாப்புடன் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்திய எடப்பாடிக்கு, தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பயத்தில் கோயிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தேங்காய் உடைத்து தைரியம் வரவழைத்துக் கொண்டு வழிபட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி சென்னை புறப்பட்டார். ஆனாலும் உதறல் இருந்தது. கோயிலில் சாமியாடிய பக்தர் ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த ஸ்ரீராமசாமி என்பதும் தினகரனின் கப்சா நண்பர் என்பதும் தெரியவந்தது. அவர் வழக்கமாக வரும் பக்தர்தான் அவருக்கு வேறு எந்த நோக்கம் இல்லை என்று தெரிந்தவுடன் போலீஸார் அவரை விடுவித்தனர். பின்னர் வெளியே வந்த அவரை அங்கு வந்திருந்த பக்தர்கள் “மக்கள் விரோத அடிமை ஆட்சி நடத்தும் எடப்பாடிக்கு சரியான அடி கொடுத்தீர்கள்” என பாராட்டிக் கைகொடுத்தனர். அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்த பக்தர், ‘பகவான் என்னை அழைக்கும் போதெல்லாம் நான் வருவேன். தமிழ்நாடே சீரழிஞ்சு போய் கிடக்கு, அவர் குழப்பத்தில் இருக்கிறார். அவர் இங்கு பக்தராக வந்ததால் அவரை அழைத்து அவருக்கு அருள்பாலித்துள்ளார். அவன் யாரு என்னன்னு கேட்டான், அவன் ஒரு மாயையில் இருக்கிறான்’ என்று ஸ்ரீராமுலு பேட்டி அளித்தார். கப்சா நிருபர் விசாரித்ததில் ஸ்ரீராமசாமியின் பகவான் சாட்சாத் அமமுக கட்சித் தலைவர் தினகரன் என்பதும், தமிழகத்தில் இருந்தபடியே மந்திர தகடும் மண்டை ஓடும் வைத்து டெலிபதியில் தினகரன் எடப்பாடிக்கு மறைமுக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. முன்னதாக சசிகலாவின் தம்பி திவாகரனையே சசிகலாவை அக்கா என்றழைக்க மாட்டேன் என்று சொல்லவைத்து செய்வினை செய்ததும் தினகரன் என்பது தெரிய வந்துள்ளது.

பகிர்