கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தது கேலிக் கூத்தானது என்று இரண்டு நாட்கள் கழித்து ரஜினி விமர்சனம் செய்துள்ளார். கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை கிடைக்காத போது எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மேலும் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்று இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதற்குள் காங்கிரஸ் தரப்பில் பாஜக தலைமை ஆட்கள் பேசிய ஆடியோக்கள் வெளியாகி, பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு பணத்தை ஒழித்துவிட்டதாக சொன்ன மோடி 100 கோடி வரை எம்.எல்.ஏக்களுக்கு வழங்க இருந்ததாக தகவல் வெளியானது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மகளிர் உறுப்பினர்களுடன் ரஜினிகாந்த் கோடைக்கேற்ற ‘சிலு சிலு’ சந்திப்பு நடத்தினார். இதில் சில முக்கியமான விவகாரங்கள் குறித்து வர ஆலோசனை நடத்தினார். அப்போது ரஜினிகாந்த் கூறுகையில் கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தது கேலிக் கூத்தானது. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகா ஆளுநர் அதுபோல் செய்திருக்கக் கூடாது. மெரினாவில் ஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல் துறை தடைவிதித்துள்ளது குறித்து கேட்கிறீர்கள. காவல்துறை காரணமின்றி எதற்கு தடை விதிக்காது என்பது என்னுடைய கருத்து என சர்வாதிகார தொனியுடன் சொன்னார் ரஜினி. ஐபிஎல்லுக்கு எதிராக அண்ணா சாலையில் நடந்த போராட்டத்தின்போது போலீஸார் மீது ஒரு கும்பல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. அப்போது தனது டுவிட்டரில் ரஜினி கூறுகையில் சீருடையில் இருந்த போலீஸாரை மர்ம நபர்கள் தாக்கியது வன்முறையின் உச்சம் என்றார். இன்று நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல் துறை தடை விதிக்காது என்றார். இது நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. கமலுடன் கூட்டணி வைப்பது குறித்து இப்போது யோசிக்கவில்லை. கட்சி தொடங்கும் போது கமலுடன் கூட்டணி குறித்து யோசிக்கலாம். கட்சியே இன்னும் தொடங்கவில்லை கூட்டணி வைப்பது குறித்து பின்பு பேசலாம். காவிரி விவகாரத்தில் கர்நாடக உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும். மஜத- காங்கிரஸ் தலைமையிலான புதிய கர்நாடக அரசு காவிரி தீர்ப்பை மதிக்க வேண்டும். காவிரி தீர்ப்பை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ரஜினி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். செத்த கிளியை சீட்டெடுக்க சொன்னது போல் கர்நாடக களேபரம் அடங்கி இரண்டு நாட்களான பின் ரஜினி பேட்டி கொடுத்துள்ளது பெண்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொடர்ந்த ரஜினி கப்சா பேட்டியில் “கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தது கேலிக் கூத்தானது. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகா ஆளுநர் அதுபோல் செய்திருக்கக் கூடாது. இவ்வாறு என்னை பேச சொன்னதே பிஜேபி கட்சிதான். எல்லாம் ஒரு வகை நாடகம் தான். ஏனெனில் நாளை என் முதுகில் தான் பாஜக பயணிக்க வேண்டும் தமிழ்நாட்டில். எப்பவுமே எனக்கு “ஸ்டார்ட்டிங் ட்ரபுள்” உண்டு. லதாவை கேட்டுப்பாருங்கள், அதான் எதிலும் தாமதம். சாவுக்கு வரச்சொன்னால் கருமாதிக்கு வந்துதான் கருத்து சொல்லும் பழக்கம் எனக்கு ஆபரேஷன் கர்நாடகா தோல்வி. அடுத்து ஆபரேஷன் தமிழ்நாட்டை ஆரம்பித்துவிட்டது பாஜக. காலாவுக்கு பிறகு குருமூர்த்தி டைரக்ஷனில் மோடி தயாரிப்பு மேற்பார்வையில், எழுதிக்கொடுத்த வசனம் இது. அதை தான் ஒப்பிக்கிறேன்”. என்றார்.

பகிர்