நாட்டின் மிகப் பெரிய மாநிலங்களில் பிரதமர் மோடி அரசு மீது கடும் அதிருப்தி நிலவுவதாகவும் தமிழகத்தில் இந்த எதிர்ப்பு அலை விஸ்வரூபம் எடுத்திருப்பதாகவும் லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தற்போதைய நிலையில் பாஜக அரசுக்கு எதிரான அலையே நாடு முழுவதும் வீசுவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மோடி அரசின் செயல்பாடுகள் தொடர்பாக லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டின் பெரிய மாநிலங்கள் அனைத்திலும் மோடி அரசுக்கு எதிரான அலை வீசுவதாக அக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் கருத்து பெரிய மாநிலங்களான ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ஒடிஷா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்களில் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இதில் கடந்த ஆண்டு மே மாதம் இருந்த மோடி அரசு மீதான அதிருப்தி அனைத்து மாநிலங்களிலும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசங்களிலும் மோடி அரசுக்கு எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளது. உ.பியில் 44%. மத்திய பிரதேசத்தில் 46%. ராஜஸ்தானில் 37% அதிருப்தி இருக்கிறது. ஆனால் பீகாரில் 29% அதிருப்தி உள்ளது. தென் மாநிலங்களில் கேரளாவில் 64% ஆந்திராவில் 68%; தெலுங்கானாவில் 63% அதிருப்தி நிலவுகிறது. கர்நாடகாவில் சற்று குறைவாக 40% மோடி அரசு மீது அதிருப்தி இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2017-ம் ஆண்டு மே மாதம் மோடி அரசு மீதான அதிருப்தி 55% ஆக இருந்தது. தற்போது இது விஸ்வரூபமெடுத்து 75% ஆக அதிகரித்துள்ளது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 20% இருந்த எதிர்ப்பு தற்போது 40% என அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் 28% இருந்த மோடி அரசுக்கான எதிர்ப்பு, தற்போது 47% என உயர்ந்திருக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் மோடி அரசுக்கு எதிராக அலை அதிக அளவில் இருக்கிறது. நான்கில் மூன்று பங்கு முஸ்லிம்கள், ஐந்தில் நான்கு பங்கு கிறிஸ்தவர்கள், சீக்கியர்களில் ஐம்பது சதவிகிதம் பேர் அடுத்த முறை மோடி அரசு அமைவதை விரும்பவில்லை. ஐந்து தென்மாநிலங்களின் ஒட்டுமொத்த ஓட்டு சதவிகிதத்தில் 18 சதவிகிதம் மட்டுமே மோடி அரசு பெறும் என்று கூறப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பின்மை, பணமதிப்பிழப்பால் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, போன்றவற்றால் கடும் அதிருப்தி நிலவுகிறது. தலித்கள் மீதான வன்முறை கட்டவிழ்ப்பால் ஒட்டு மொத்த தலித் சமூகம் பா.ஜ.க வை புறக்கணித்துவிட்டது. பெரும்பாலான தலித்கள் அடுத்த பிரதமராக ராகுல்காந்தி வர வேண்டும் என நினைக்கிறார்கள். விஜய் மல்லையா, நிரவ் மோடி தப்பி ஓட்டம், வங்கிப் பணம் சூறையாடல், கதுவா, ஆசிபா கற்பழித்துக் கொலை, ஜட்ஜ் லோயா மர்ம மரணம், போன்றவறால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள், நூறுக்கு 44 சதவிகிதம் பேர் தேசம் தவறான பாதையில் போய்க்கொண்டிருப்பதாக கருதுகின்றனர். கர்நாடகாவில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் எடியூரப்பா பதவி ஏற்று விலகியதும், சமீபத்திய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவமும் தென்னிந்தியாவில் பாஜகவின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைத்துள்ளதாக உங்கள் நியூஸ் கப்சா சர்வே கூறுகிறது.

இந்த செய்தியின் ஆதாரம்: http://www.lokniti.org/pdf/Lokniti-ABP-News-Mood-of-the-Nation-Survey-Round-3-May-2018.pdf

பகிர்