தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பியதையடுத்து அங்கு அமலில் இருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரித்து முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடந்தது. போராட்ட அறிவிப்பையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 21-ம் தேதி இரவு 10 மணி முதல் 23-ம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத் தப்பட்டது. தடையை மீறி 22-ம் தேதி காலை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். கல்வீச்சு, தடியடி சம்பவங்களால் போராட்டம் கலவர மாக மாறியது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு, கல்வீச்சு, தடியடியில் 34 போலீஸார் உட்பட 136 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றம் நிலவியதால் 144 தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள், வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம், எப்போதும்வென்றான் குறுவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு 25-ம் தேதி காலை 8 மணி வரை நீடிக்கப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து பதற்றம் நீடித்ததால் மே 27-ம் தேதி (நேற்று) வரை தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. பதற்றத்தைத் தணிக்க அரசு தரப் பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இதன்காரணமாக தூத்துக்குடியில் சகஜ நிலை திரும்பி, மக்களின் இயல்பு வாழ்க்கை சீரடைந்துள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. இதனால், நேற்று காலை 8 மணியுடன் 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. பதற்றம் தணிந்ததால் தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்படவில்லை. அதேநேரத்தில், தூத்துக்குடி மாநகரில் மட்டும் போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. முக்கிய சாலைக ளில் போலீஸார் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு தல் கூறினார். டிஜிபி டி.கே. ராஜேந்திரனும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டு, நிலைமையை ஆய்வு செய்தார். இந்நிலையில், துப்பாக்கிச் சூட் டில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு அரசு ஏற்கெனவே அறிவித்த நிவாரண நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துரதிருஷ்டவசமாக 13 பேர் உயிரிழந்தது எனக்கு மிகவும் துயரத்தையும் வேதனையும் அளித்தது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டேன். தூத்துக் குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அங்கே சென்று உயிரிழந்தவர்க ளின் குடும்பத்தினர், காயமடைந்தோரை சந்தித்தபோது, அவர்கள் நிவாரண நிதி உதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையிலும் நிவாரண நிதியை உயர்த்தி வழங்கக் கோரும் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 25-ம் தேதி உத்தரவிட்டதையும் பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளை யும் தமிழக அரசு பரிசீலித்தது.
அதனடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரண உதவியை உயர்த்தி, ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சத்தை ரூ.5 லட்சமாகவும் லேசான காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை ரூ.1.5 லட்சமாகவும் உயர்த்தி முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாஜக மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என கூறியது குறிப்பிடத்தக்கது. சுடப்பட்டது தீவிரவாதி என்றால் எதற்கு நிவாரணம் கொடுக்கிறீர்கள், பொதுமக்கள் என்றால் ஏன் சுட்டுக் கொன்றீர்கள்? என்ற கப்சா நிருபரின் கேள்விக்கு அவரால் விடையளிக்க முடியாது. இந்நிலையில் குற்றச்செயலை நியாயப்படுத்தும் விதமாக, 10லட்சம் தொகையை 20 லட்சமாக உயர்த்தி, 15 லட்சம் தருகிறேன் என்று புருடா விட்ட மோடிஜி யை கே. பழனிசாமி விஞ்சி விட்டதாக கப்சா நிருபர் கொந்தளித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை (செவ்வாய்க் கிழமை) தொடங்கவுள்ளது. இதில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கிளப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், “எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்” என்பது போல் துணை முதல்வர், அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்டோர் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மருத்துவமனைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற போது, உள்ளே பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று தூத்துக்குடி மருத்துவமனையில் மக்களை சந்தித்த போது, கோபத்தில் இருந்த மக்கள் அவரை விடாமல் கேள்விகளால் துளைத்தனர். மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கடம்பூர் ராஜு பாதியில் வெளியேறினார். உள்ளே இருந்த பத்திரிகையாளர்கள் இதை வீடியோவாக வெளியிட்டனர். இதே நிலைமை பன்னீர்செல்வத்திற்கும் வரக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்திரிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் மருத்துவமனைக்கு உள்ளே என்ன நடந்தது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்திய போது, பத்திரிக்கையாளர்களின் உதவியை மட்டுமே கேட்டு இருந்தார். இப்போது பிரச்சனை என்றவுடன், மக்களுக்கு எதிராகவும், பத்திரிக்கையாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளார்.

பகிர்