கர்நாடக தேர்தலுக்கு முன்பாக பாஜக திட்டமிட்டிருந்த கலவரம் மங்களூரு அதிகாரிகளால் முறியடிக்கப்பட்ட செய்தி வெளியாகி அதிர்ச்சி அளித்து உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததில் இருந்தே பசுவதை என்பது கொலைக் குற்றத்திற்கு இணையான பிம்பத்துடன் கட்டமைக்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததும், பசு கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதிரடி கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. 2017 டிசம்பர் அன்று 22 வயது முஸ்லிம் வாலிபர் பசுவதை பெயரில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். பசு வதை என்பது கர்நாடகாவில் மிகப்பெரும் ஆயுதமாக எடுக்கப்பட்டு வஞ்சக திட்டங்கள் பாஜக அரசால் தீட்டப்பட்டன. அம்ரிததாரா கௌசாலை கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி. நாடு முழுவதும் பசுபாதுகாவலர்களால் கொலைகள் நடந்த வண்ணம் உள்ளது. 27 மார்ச் 2018 தேர்தல் அறிவிப்பு கர்நாடகத்தில் வெளியானது. முதற்கட்ட திட்டமாக பாஜக கர்நாடகாவில் கொந்தளிப்பை உண்டு பண்ண முயன்றது. 29 மார்ச் அன்று சில பசுக்கள் இந்த கௌசாலையில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டது. இதை வழிநடத்தியவர் ராஜாராம் பட். ராஜாராம் பட் பசு பாதுகாவல் மன்னனாக வலம் வருபவர். நான்கு முஸ்லிம் இனத்தவர், அகமது கபீர், அபுபக்கர் சித்திக், மொஹமது இம்ரான், மற்றும் கர்பே சித்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை மறைக்க ஒருபுறம் ராஜாராம் பட் உண்ணாவிரத டிராமாவை தொடங்கினார். இந்த பித்தலாட்டம் தேர்தலுக்காத்தான் என்பதை எலக்ஷன் கமிஷன் உணர்ந்து கொண்டு, கண்காணித்து வந்தது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகமானது. பொய்யான உண்ணாவிரதமும் தொடர்ந்தது. உண்ணாவிரதத்தை காணவந்த பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை இழிவாகப் பேசி வந்தனர். இது தேர்தல் கமிஷனை கவனிக்க வைத்தது. கல்லாடா பிரபாகர் என்ற ரவுடியை வைத்து திட்டம் தீட்டப்பட்டது. அவனது தலைமையில் பசு திருட்டை இந்துக்களுக்கு எதிரான பெருங்குற்றமாக திணித்து சிறுபான்மையினரை தாக்கி ஓட்டு வங்கியை நிரப்ப திட்டம் தீட்டப்பட்டது.

உண்ணாவிரதா டிராமா நன்றாக போய்க்கொண்டு இருந்தபோது கல்லாடா பிரபாகர் ஒரு உரை ஆற்றினான். அதில் “இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை, பசுவை கடத்தியவர்கள் முஸ்லிம்கல் அவர்களை பாகிஸ்தானுக்கு துரத்த வேண்டும். பசுக்கள் வதையை தடுக்காவிட்டால் இந்துக்கள் வாழ முடியாது” என்றான். ஒருபடி மேலே போய் “பசுக்களை திருடுபவர்கள் நாளை இந்துப் பெண்களையும் அம்மா தங்கை என பாராமல் கடத்துவார்கள்” என்றான். சுதாரித்துகொண்ட மாவட்ட நிர்வாகம் கொஞ்சீ காவல் நிலையத்தில் அவன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து. சிறையில் தள்ளியது. ஆனாலும் ராஜாராம் பட் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. ராகேஸ்வர பாரதி என்ற போலிச்சாமியார் நம்மூர் நித்யானந்தா போல் மடத்திற்கு வரும் பெண்களை மயக்கி உடல் பசியை தீர்த்துக் கொள்பவர் அவர் இடை நுழைகிறார். அவரும் உண்ணாவிரதத்தை ஆதரிக்க டிராமா தொடர்கிறது. ராஜாராம் பட் உடல் நிலை மோசமடைவதாக வாட்சப் குரூப்களில் பொய்ச்செய்தி பரப்பப்பட்டது. விழித்துக் கொண்ட கர்நாடக அரசு உண்ணாவிரதத்தின் 8ஆம் நாள் ராஜாராமை கைது செய்தது. மருத்துவமனையில் தள்ளியது. ராஜாராம் கெஞ்சிக் கூத்தாடி வழிக்கு வந்தான். பின்னர் இன்னொரு சாமியாரான சுவாமி விஸ்வதீர்த்தா தலைமையில் இளநீர் பருகி உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பசு பாதுகாவல் என்ற பெயரில் ஸ்டெர்லைட் போல் கலவரத்தை உண்டு பண்ணி தேர்தல் சமையத்தில் வாக்கு வங்கியை குறி வைத்து பாஜக நடத்தவிருந்த நாடகம் நடத்தவிடாமல் தடுக்கப்பட்டது. பசுவதை துருப்புச்சீட்டு விஷயத்தில் கர்நாடகாவில் பாஜகவின் பருப்பு வேகமல் போனது. தேர்தல் முடிவிற்கு பிறகு கொக்கரித்த அமித் ஷா பாஜகவின் வெற்றி பஞ்சாயத்தில் இருந்து பார்லிமெண்டுக்கு வந்துள்ளது என்றார். பின்னர் எடியூரப்பா பதவி 48 மணிநேரத்திற்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் மண்ணைக்கவ்வியது அனைவரும் அறிந்ததே.

பகிர்