பெட்ரோல் விலையை 81 ரூபாய் வரை விண்ணை முட்ட செய்துவிட்டு வழக்கம் போல் அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.. சிங்கப்பூரிலுள்ள தமிழர்கள் வழிபடும் மாரியம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்து ஆசி பெற்றார். செவ்வாய்க்கிழமை, இந்தோனேஷியா சென்ற மோடி, நேற்றுமுன் தினம் முதல் சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வரும் பிரதமர் மோடி, இன்று சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் டாங் உடன் சந்திப்பு நிகழ்த்தினார். இதையடுத்து, சிங்கப்பூரில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடங்களுக்கு கோ சோக் டாங்குடன் மோடி சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் உடன் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
இதன்பின்னர், சிங்கப்பூரில் தமிழர்களால் கட்டப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வரும் மாரியம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி அம்மன் தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகிகள் முன்னதாக அவரை வரவேற்று அழைத்து சென்றனர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமர் மோடிக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. அங்கு மோடிக்கு  நாக்கில் அலகு குத்த பூசாரிகள் போட்ட திட்டம் தவிடுபொடி ஆனது. இந்தியா திரும்பி பொய் புரட்டு பித்தலாட்டம் செய்ய கருநாக்கு தேவைப்படுவதால் மோடி அலகு குத்த மறுத்துவிட்டதாக தெரிகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது அது பற்றி வாய் திறக்காத மோடி கிரிக்கெட் வீரர் கொடுத்த பிட்னஸ் சேலன்ஜில் கலந்து கொண்டு ட்வீட்டினார். ஆனாலும் குற்ற உணர்ச்சி மிகுதியால் பிராயச்சித்தம் தேடி தமிழர் கட்டி வழிபடும் அம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சிணம் செய்து பாவத்தை கழுவினார். மேலும் சிங்கப்பூரில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற வழிபாட்டு தலமான சூலியா மசூதிக்கும் பிரதமர் மோடி சென்று பசுவதை என்ற பெயரில் வடநாட்டில் சில வயோதிக முசல்மான்களை கொன்றதற்கும் சிறப்பு நமாஸ் செய்ததாக தெரிகிறது. தொழுகையின் போது சிங்கப்பூர் கலச்சார அமைச்சர் கிரேஸ் யென் உடனிருந்தார்.
பகிர்