சென்னை: ரஜினியின் காலா படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் சென்னை நாடார் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் ுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் வியாழனன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு ரிலீசாகும் படம் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு இடையே எதிர்ப்புகளும் உருவாகி வருகின்றன. கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நி க் காலா என அழைக்கப்படும் திரவியம் நாடாரின் மகன், காலா படத்திற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.இந்த சூழ்நிலையில், இன்று காலா படத்தை தடை செய்யக் கோரி, சென்னை மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கங்கள் சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது

காலாவிற்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?

ரஜினிக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கிருந்த தமிழர்களுக்கு நன்மைகள் செய்து கூத்வாலா சேட் என்று அன்பாக அழைக்கப்பட்ட திரவியம் நாடாருடைய கதையைத் தான் காலா படமாக எடுத்திருக்கிறார்கள். அதுவும் எங்களுக கு மகிழ்ச்சியே. ஆனால், நாடார் சமூகத்தைச் சேர்ந்த அவரை, வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவராகக் காட்டுவது தவறு. இது திட்டமிட்டு செய்யப்படும் இருட்டடிப்பு வேலை.

ரஞ்சித்தின் மழுப்பல் பதில்:

திரவியம் நாடாரின் மகன் ஜவஹர் நாடார் இது தொடர்பாக காலா பட இயக்குநர் ரஞ்சித்திடம் விளக்கம் கேட்டபோது, அதற்கு அவர் மழுப்பலாகவே பதில் தந்துள்ளார். ஒரு உண்மை விசயத்தை படமாக்கும் போது, அதனை திரித்துக் கூறாமல் அப்படியே கூற வேண்டும்.

படத்தில் காலா கதாபாத்திரத்தை நாடார் சமூகத்தைச் சேர்ந்தவராக காட்டியிருக்கிறார்களா அல்லது தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக காட்டியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. படத்தின் நாயகனை எந்த சமூகத்தை சேர்ந்தவராகவும் காட்டாமல், தமிழராக முன்னிலைப்படுத்தியிருந்தால் ம ிழ்ச்சியே. ஆனால், நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தரை, தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக காட்டினால் அதனை நாங்கள் நிச்சயம் எதிர்ப்போம்.

படத்தை முழுவதுமாக பார்க்காமலே நீங்கள் இந்த குற்றச்சாட்டை எப்படி முன்வைக்கிறீர்கள்?

இதுவரை வெளியான காலா டிரெய்லர் காட்சிகளின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் கூறுகிறோம். அதுமட்டுமின்றி நேற்று வெளியா அமெரிக்க தியேட்டர் விளம்பரத்திலும் காலா படம் நெல்லைத் தமிழரின் கதை தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து மும்பை சென்று கூத்வாலா சேட்டாக அம்மக்களால் கொண்டாடப்பட்டவர் திரவியம் நாடார் தான். ஆனால், படத்தில் ரஜினி வரும் காட்சிகளின் பின்னணியில் தலித் மக்களின் அடையாளங்கள் காட்டப்படுகின்றன. அதோடு, இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித்தும் தலித்திய சிந்தனையாளர். அவருடைய முந்தைய படங்களே இதற்கு சாட்சி. எனவே, படத்தில் காலா கதாபாத்திரத்தை அவர் தலித் நாயகனாகக் காட்டியிருப்பாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு அதிகரித்துள்ளது.

உங்களுடைய கோரிக்கை என்ன?

பகிர்