விழுப்புரம்; நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 60 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார். 10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா. விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி அனிதா கடந்த தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு நீட் தேர்வு தொலைதூர இடங்களில் போடப்பட்டதால் 3 மாணவர்களின் பெற்றோர்கள் உயிரிழந்தனர். தற்போது பிரதீபா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வு தமிழகத்தில் உயிர்களை காவு கொள்வது தொடரும் நிகழ்வாகிவிட்டது.

பகிர்