2019-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படுகிறது. இதை உண்ணுவதால் நம் உடலுக்கு கேடு விளையும். மேலும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் சூற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படும். குப்பைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விலங்குகள் உண்ணும் போது தொண்டைகளில் சிக்கி சில உயிரினங்களை இழக்கிறோம். எனவே பிளாஸ்டிக் இல்லா நாட்டை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களும் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றன. இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரின்போது சுற்றுச்சூழல் குறித்து முதல்வர் கே.பழனிசாமி பேசினார். அப்போது சட்டசபை விதி 110-இன் கீழ் அவர் அறிவிக்கையில் பிளாஸ்டிக் பொருட்களால் தண்ணீர் தேங்கி டெங்கு போன்ற நோய் ஏற்படுகிறது. மழைநீர் கால்வாய்களை அடைத்து வெள்ளம் ஏற்பட பிளாஸ்டிக் காரணமாகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் ஆடு, மாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வரும் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம். பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். பிளாஸ்டிக் இல்லாத மாநிலத்தை வருங்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம். பால், தயிர், மருந்து பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்க தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா இருந்த போது சுமார் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் ஊரக பகுதிகளில், 815 மதுக்கடைகளை திறக்க, உச்சநீதிமன்றம் சமீபத்தில் தமிழக அரசுக்கு அனுமதி தந்தது. அதே சமயம் மாணவர்கள் இல்லாததால் 800 பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் சிலர் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், மிருகத்தனத்துக்கு ஒரு உதாரணம். பா.ஜனதாவும், அதன் கூட்டாளிகளும் மக்களை எப்படி தாக்குகிறார்கள் என்பதை இது பிரதிபலிக்கிறது. சம்பவம் பற்றி பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விளக்கம் அளிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு பற்றி அரசு கவலைப்படவில்லை, மக்களின் புகாருக்கு பதில் அளிக்கவும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு சாதகமாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. சுற்றுச்சூழலை கெடுக்கும் அந்த ஆலை மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்த இரு கொடுங்கோல் செயல்களையும் மறக்கடிக்கவும், மடைமாற்றவும், ஜெயலலிதா உணவு பட்டியலை வெளியிட்டுப் பார்த்தார்கள். பாச்சா பலிக்கவில்லை. ஜெயலலிதாவே சமாதியில் இருந்து எழுந்து வந்தாலும் எங்களை ஏமாற்ற முடியாத் என மக்கள் கொதித்தெழுந்தனர். இப்போது சப்பைக்கட்டு கட்டும் விதமாக பிளாஸ்டிக்கை ஒழிக்கிறேன் பேர்வழே என அடிமைகள் கபட நாடகம் ஆடுவதன் அவசியம் என்ன என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பகிர்