காலா படத்தை சிங்கப்பூரிலிருந்து பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்த நபரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் கேத்தே திரையரங்கில் இப்படத்தை முதல் ஷோ பார்த்த பிரவீன் என்ற இளைஞர், திரையரங்கில் இருந்தபடியே படத்தை லைவ்வாக 45 நிமிடங்கள் பேஸ்புக்கில் ஒளிபரப்பினார். காலா படத்தின் முதல் ஷோ தியேட்டரில் வெளியாகும் முன்னரே, அதனை இணையத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், சிங்கப்பூரில் இளைஞர் ஒருவர் இப்படத்தை பேஸ்புக்கில் லைவ் செய்தது திரையுலகில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `காலா’ படம் இந்தியா முழுவதும் இன்று வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அரசியல் வருகை குறித்து அறிவித்த பிறகு வரும் ரஜினியின் படம் என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சிங்கப்பூரில் ஒருவர் `காலா’ படத்தை திரையரங்கிலிருந்து பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்துள்ளார். அவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர் என்று விஷால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் `காலா’ படம் காலையில் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளில் போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் வாட்ஸ்அப்பில் தற்போது வைரலாகிவருகிறது. இரண்டு நாட்களுக்கு மட்டுமே டிக்கட் விற்பனை ஆகியுள்ளது. சனி ஞாயிறு டிக்கட்டுகள் தியேட்டரில் காற்று வாங்குகிறது. கப்சா நிருபரின் தகவலின்படி, காலா படத்தை நேரலையில் ஒளிபரப்பு செய்த வாலிபருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினி, பன்னிங்க தான் கூட்டம் கூட்டமா தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும், சிங்கிள் சிங்கமாக ஒளிபரப்பு செய்த வாலிபருக்கு பாராட்டுக்கள்.” என்று கூறினார்.

பகிர்