காலா படம் நல்ல அரசியல் கருத்துக்களை சொல்வதால் அதை பார்த்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் ‘ஒத்து ஊதி’ பேட்டியளித்துள்ளார். காலா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி உள்ளது. இதுவரை வந்த விமர்சனங்களில் காலா மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் ‘காலா’ என்ற கரிகாலன். ‘சின்ன திருமா’ என்றழைக்கப்படும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் காலா படத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் கண்டுகளித்தார். பாஜக நிர்வாகிகள் சிலருடன் சேர்ந்து அவர் படத்தை பார்த்தார். இதற்கு பின் படம் குறித்து அவர் கூறியதாவது. “காலா படம் கருப்பாக ஆரம்பித்து கலராக முடிந்துள்ளது. காலா படத்தில் சில வண்ணங்களை விட பல வண்ணங்கள் வந்தது. ரஜினி திரைப்பட நடிகராக அரசியலுக்கு வந்துள்ளார். நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். சினிமா வாழ்க்கை வேறு அரசியல் வேறு. ரஜினியின் சினிமா வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் சேர்த்து வைத்து பார்க்க கூடாது. ரஜினி படத்தில் முன்பே அரசியல் இருந்தது. இது அவரின் முதல் அரசியல் படமல்ல. நான் திரைப்படத்திற்கு மார்க் போட மாட்டேன். எங்கள் சகோதரர்கள் எல்லாம் ஒன்றாக பார்க்க ஆசைப்பட்டதால் காலா பார்த்தோம். இப்போது இந்த படம்தான் பிரபலமாகி இருக்கிறது. அதனால் பார்த்தோம். காதல் படங்களை விட காலா படத்தில் விருப்பம் அதிகம். காதல் கதைகளை விட சமூக சிந்தனை கொண்ட கதைகளே எனக்கு பிடிக்கும். எனவேதான் “காலா” திரைப்படம் பார்க்க வந்தேன் யார் வேண்டுமென்றாலும் அரசியல்வாதி ஆகலாம். சின்ன திருமா ரஞ்சித் போன்ற இயக்குனரும் அரசியல்வாதி ஆகலாம். மெர்சல் படம் போல் காலா படத்தில் பாஜகவை விமர்சித்ததாக நான் பார்க்கவில்லை. சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்க வேண்டும். ஆனால் விளம்பரத்தட்டிகளில் ‘வருங்கால முதல்வரே’ என்ற பில்டப் முக்கியம். சமூக கருத்துகளைக் கொண்ட படம் என்பதால் காலாவை பார்த்தேன். படத்தை அரசியலுடன் இணைந்துப் பார்த்தால் பிரிவைதான் ஏற்படுத்தும், (கண் கலங்குகிறார்) காலா படத்தில் சொல்லப்பட்டிருப்பவை ராஜனிகாந்த்தின் கருத்துக்களே இல்லை. இயக்குனர் ரஞ்சித்தின் சொந்தக் கருத்துக்கள். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்த கருத்துக்களை நீக்க சொன்னேன். அது நாற வாய். இது வேற வாய். ஜோசப் விஜய் பிரச்சனை பண்ணினால் அது ரத்தம், அதுவே ரஜினி என்ன பேசினாலும் அது எங்களுக்கு தக்காளி சட்னி.