சுவற்றை கைப்பற்ற மெட்ராஸ். நிலத்தையே கைப்பற்ற மும்பை. நில அதிகாரம் எனும் ஒன் லைனை வைத்துக்கொண்டு தாராவி முதல் தமிழீழம் வரைக்குமான அரசியலைப் பேசியிருக்கிறார் ‘டுபாக்கூர் சின்ன திருமா’ ரஞ்சித். பலமுறை பார்த்து சலித்த குப்பத்து ராசா கதை. பல படங்களில் பார்த்துச் சலித்த திரைக்கதை. இடம் மட்டும் மும்பை சேரி தாராவி. “கியா ரே செட்டிங்கா, வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்… தில்லிருந்தா வாங்கலே….” என்கிற மாஸான வசனம் டிரெய்லரில் தூள் பறக்க ஆவலுடன் படத்தில் எப்படி இருக்குமோ என எதிர்ப்பார்ப்பு எகிற, படத்தில் அந்த வசனத்துக்குப்பின் சப்பென்று போகிறது காட்சியும், மீதி மொத்தப்படமும். அப்பாவி சிறுவன் கொல்லப்படுகிறான், ஒரு சண்டைக்காட்சி கூட இல்லை. இதேப்போல் ஆங்காங்கே மாஸான வசனத்திற்க்குப்பின் படத்தில் அதற்கேற்ற நச் காட்சிகள் இல்லை, சூப்பர்ஸ்டாரும் இல்லை. பின்னணி இசை இன்னும் சிறப்பாய் வந்திருக்கலாம், இரு பாடலைத்தவிற மற்றவை சுத்தம். மெட்ராஸிலிருந்து தொடரும் அந்த குரூப் நடனக்காரர்களின் டெம்ப்ளேட் நடனமும் சீரியஸ் காட்சிகளில் அவர்கள் ராகமும் எரிச்சல்.
பிரடிக்டபிள் கதை, இண்ட்டரஸ்ட்டிங் காட்சிகள் இல்லாதது கதையை மிக தொய்வாய் நகர்த்துகிறது. சமுத்திரக்கனியின் கேரக்டர், குடியுடன் பேசும் வசனங்கள், நக்கல்கள், அட்வைஸ்கள் அலுப்பு. ‘ஒற்றே அடி’ கொடுத்து அனுப்பிவிடலாமா என்று எரிச்சலாக வருகிறது. மிக முக்கியமாய் மும்பை சேரியில் அதிகம் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களின் பேச்சில் ஹிந்தி சரளமாய் வந்து விழும். இந்தப்படத்தில் ஹிந்திக்காரன் கூட தமிழ் பேசி சாவடிக்கிறான். ரெண்டு மூன்று ஹிந்தி வார்த்தைகள் மட்டும் யூஸ் செய்கிறார்கள். தமிழனாக இருந்து கொண்டு தமிழர்களுக்காக படம் எடுக்கிறேன் பேர்வழி என்று சின்ன திருமா ரஞ்சித், மலேசிய மக்களுக்காக கபாலி எடுத்தது போல் நானா படேகர், ஹூமா குரேஷி போன்றோரை வைத்து ஹிந்தி பிசினஸ் செய்ய ஹிந்தி வார்த்தையான ‘காலா’ என்ற டைட்டிலை வைத்துக் கொண்டு பிசினஸ் செய்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளிலும், படத்திலும் பழைய ரஜினியும் அந்த ஃபோர்ஸும் மிஸ்ஸிங். கிழடு தட்டிவிட்டதல்லவா?

தாராவி செட் என்ற பெயரில் குப்பை கூளத்தை அள்ளிக் கொண்டு வந்து செட் போடுவது எளிது. பின்னர் வரும் காட்சிகளில் மொத்தமாக எரித்து விடுகிறார்கள். ஆஸ்பெஸ்டாஸ் கம்பெனியே காலியாகி விட்டிருக்கும் போலிருக்கிறது. 785166 முறை தாராவி என்ற ஏரியாவை டாப் ஆங்கிளில் காட்டுகிறார்கள். அலுப்பு தட்டுகிறது. பெட்ரோல் விற்கிற விலையில் கிளைமாக்ஸ் காட்சியில் கொளுத்து கொளுத்து என்று கொளுத்துகிறார்கள். எங்கும் பற்றி எரிகிறது. 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய வயோதிக ரசிகனின் வயிறும் சேர்த்து. இடையில் வரும் பிளாஸ்பேக் அனிமேஷன் காட்சிகள் கடுப்பேற்றுகின்றன. இந்த போர்ஷனில் தனுஷ் நடிக்க் அடம் பிடித்ததாகவும், ரஞ்சித் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஆரம்பத்தில் செய்திகள் அடிபட்டன. பேசாமல் ரஜினியாக தனுஷே நடித்திருக்கலாம், சுருங்கிப்பொன முகமும் கழுத்தும், சுண்டிப்போன நரம்புகளும் பார்க்க சகிக்கவில்லை, ரஜினி சார் பெட்டர் ரிட்டையர்.

ஆரம்ப காட்சியில் பாகுபலி பாதிப்பு தெரிகிறது, அந்த அளவுக்கு செலவு செய்ய முடியாது என்பதால், அனிமேஷன் காட்சிகளாக திரையில் நில அதிகாரம் பற்றிய டாகுமெண்டரி ஓடுகிறது. நடு நடுவே ரோட்டில் படுத்திருக்கும் பிச்சைக்காரன், அழுக்கேறிய வீடுகள், வாகன நெரிசல் என ஸ்டாக் புட்டேஜ்கள் கடுப்பேற்றுகின்றன. கதை யை விஷுவலாக நகர்த்தாமல், சின்ன குழந்தைகள் கார்டூனாக காண்பித்து ரூயாயை தண்டம் செய்கிறார்கள். திரைக்கதையில் நிறையவே போதாமைகள் இருக்கின்றன. ஆனால் இதில் ரஞ்சித் பேசும் அரசியல் மிகத் துடுக்குத்தனமான் மற்றும் தவிர்க்க வேண்டிய ஒன்று. அதுவும் சென்னையின் பூர்வ குடிகள் ஒருபுறம் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மிகச் சரியாக இந்த திரைப்படம் வந்துள்ளது. இது முன்பே திமுக ஆட்சியில் அடிபட்ட சிங்காரச் சென்னை திட்டத்தை ஏளனம் செய்கிறது.
வணிக சினிமாவாகவும் இல்லாமல், சாதி போற்றும் சினிமாவாகவும் இல்லாமல், தான் கொண்ட ஒற்றை நோக்கம் குறித்து மட்டுமே கதையை நகர்த்திச் சென்ற சமரசமில்லாத இப்படி ஓர் உப்பு சப்பில்லாத இயக்குநரை சமகாலத்தில் பார்த்ததில்லை. மொத்தத்தில் தூத்துக்குடியில் யார் நீ என ரஜினியை கேட்ட இளைஞரை பாராட்ட வேண்டும். ஏய் ரஜினி, நீ அரசியல் பண்றியா, சரி மோடிய விமரிசித்து விட்டுப் போ, பாஜகவ நக்கல் அடி இல்ல நாற அடி அதகூட அரசியல் சாதுர்யம்னு ஏற்றுக் கொள்கிறோம், அத விட்டுட்டு உன் ரெண்டு பொண்ணையும் வச்சிருக்கிற ஒரு தறுதலை தயாரிக்கிறான். ஒரு தரை டிக்கெட்டு டைரக்டு பண்றான்னு இந்த ரெண்டு நாய்ங்க பேச்சை கேட்டு இந்துக்கள் வணங்குற கடவுளை ஏளனப்படுத்த உனக்கு என்ன திமிரு? உன்னை மாதிரி காசுக்காக பக்தி வேஷம் போடுற ஆள் இல்லை நாங்க. ஏண்டா கிழட்டு கபோதி தெரியாமத்தான் கேக்குறேன் இமயமலைக்கு நீ போறதெல்லாம் யாருக்கும் தெரியாம கஞ்சா அடிக்கத்தானே? என்று ஒரு பேக்புக் குஞ்சு கதறுகிறது.
சினிமாவில் போராட்டத்திற்கு ஆதரவு, உண்மையில் போராட்டத்திற்கு எதிர்ப்பு என்று இரட்டை வேடம் போடுகிறார் ரஜினி என்கிறார்கள். ஆனால் அந்த காலம் தொடங்கி இன்றுவரை “நான் அடிச்சா நீ செத்துருவ! தாய் கிட்ட குடிச்ச பாலை கக்கிருவ” என்று சினிமா வாழ்க்கையிலும், இரட்டை வேடம் போடுபவர் ரஜினி என்பது திண்ணம். வேதாந்தா ஸ்டெர்லைட்டின் அடியாள் ரஜினி என்பது நிரூபணம். வேதாந்தா இயக்குனர்களின் ஒருவர்தான் நரேஷ் சந்திரா ஈராஸ் இண்டர்னேஷனலில் சேர்மனாக இருந்தவர். சவுந்தர்யா ரஜினி இவருடன் இயக்குனராக பணியாற்றியவர். கோச்சடையான் படத்தை ஈராஸ் இண்டர்னேஷனல் தான் வெளியிட்டது. “தமிழகம் தொடர்ந்த போராட்ட பூமியாக இருந்தால் யாரும் தொழில் தொடங்க வரமாட்டார்கள். ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியவர்களை ரஜினிகாந்த் சமூக விரோதி”ன்னு ரஜினி சொன்னது ஏன்னு இப்ப புரியுதா? மணிரத்னம், அவரது பார்வையில் ஒரு ராமாயணக்கதையை சொன்னார். ரஞ்சித், அவரது பார்வையில் ஒரு ராமாயணக்கதையை சொன்னார். எடப்பாடி பழனிசாமியும் சேக்கிழார் எழுதிய ஒரு ராமாயணக்கதையை அவரது பார்வையில் சொல்ல வந்தார். அது என்னவென்பதை கேட்காமலேயே அவரைப் புறக்கணித்து விட்டது இச்சமூகம்.

‘தட்டையான சிந்தனை தட்டையான சிந்தனை’ என்று இலக்கியவாதிகள் அடிக்கடி சொல்வார்கள் அதற்கு இப்பம் அர்த்தம் தெரிஞ்சதுல்லா? தமிழ் சினிமாவில் கமல் என்னென்ன ஜானரில் படம் செய்கிறாரோ அதற்குப் போட்டியாக ரஜினியும் செய்வார். அவர் ஒரு கலைப்படம் நடித்தால் இவரும் நடிப்பார். அவர் ஒரு சை- ஃபை படம் நடித்தால் இவரும் நடிப்பார். இந்த வரிசையில் கமல் கடைசியாக உத்தம வில்லன் படத்தினில் ஆட்டோ பயோ பிக் எனும் புதிய கதை சொல்லலை தமிழில் அறிமுகம் செய்தார். இந்தியாவிலேயே அதுபோல் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. அதாவது தனது சுயசரிதையைத் தானே எழுதி அதில் தானே நடிப்பதுதான் இந்த வகை ஜானர். காலாவில் கமலின் அந்தவகை ஜானரை பீட் செய்து புதிதாக எதையாவது செய்யவேண்டும் என ரஜினி நினைத்திருப்பார் போல, ஆனால், தனது சமகால நிஜப் பாத்திரத்திற்கு எதிராகவே சமகாலத்தில் ஒருபடத்தில் நடிக்கும் இந்த வகை ஜானருக்கு என்ன பெயர் வைப்பதென தெரியாமல் உலக சினிமாவே திணறிப்போயிருப்பது ஒரு துன்பியல் கையறுநிலை.

(நன்றி சில பேஸ்புக் பதிவர்கள்)