நகர வளர்ச்சி காரணமாக எரிபொருள் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் என பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன; விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. எனவே தனி நபர் வாகன பயன்பாட்டை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காகவே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வாடகை அடிப்படையில், சைக்கிள் பகிர்வு திட்டத்தை செயல்படுத்த, கோவை மாநகராட்சி முடிவு செய்தது. சீன நிறுவனமான ஒஃபோ இதனை செயல்படுத்த தயாராக உள்ளதாக முன் வந்தது. அந்த நிறுவனத்துடன் கைகோர்த்தது கோவை மாநகராட்சி. பரீட்சார்த்த முறையில் ஆர்.எஸ்.புரத்தில், கடந்த மார்ச் 3ல் இத்திட்டம் துவக்கப்பட்டு, 50 இடங்களில் சைக்கிள் வழங்கப்பட்டது.

சைக்கிள் ஒரு மாதத்துக்கு இலவசம் என்று கூறியதால், பலரும் ஆர்வமுடன் ஓட்டிப்பார்த்தனர். இந்நிலையில் இளைஞர்கள் புறநகர் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர். சிலர், தங்களது வீட்டுக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டனர். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் போல் பயன்படுத்தினர். சைக்கிளில் பதித்துள்ள பார்கோடு மூலமாக, நிற்கும் இடத்தை கண்டறிந்து, மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், சைக்கிளை பயன்படுத்த, எல்லை வரையறுக்கப்பட்டது. அதன் பின்னும் சைக்கிள் லாக் கை சிலர் உடைத்து பயன்படுத்தினர். கூடையை பிய்த்தெறிந்தனர். பூட்டை உடைக்க முடியாதவர்கள், குளத்துக்குள்ளும், ரோட்டோரத்திலும் தூக்கி வீசினர். பூட்டை உடைத்த சிலர், காரில் ஏற்றி, வெளியூருக்கு எடுத்துச் சென்றனர். இன்னும் பலர், சைக்கிளின் வண்ணத்தை மாற்றி, பயன்படுத்தி வந்து உள்ளனர். இது, கோவை மக்களை நம்பி களமிறங்கிய, நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும் முதலீடு செய்த அந்த நிறுவனம், இழப்பை தாங்க முடியாமல், கோவையை விட்டு விடைபெற முடிவு செய்துள்ளது. எதிர்கால சந்ததியின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்ட அற்புதமான திட்டம், தோல்வி அடைந்துள்ளது.

பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் காரணமாக இந்தத் திட்டத்தை முற்றிலும் மாநகராட்சி தற்போது கைவிட்டு உள்ளது. இதனால் இதற்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் வரிப்பணம் வீணாகி உள்ளதாக புகார் எழுந்து உள்ளது. மேலும் இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலேயே இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து இருப்பதாகவும் , இந்தச் சிறப்பு திட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்து உள்ளனர். புதிய பல திட்டங்கள் கொண்டு வரும் போது மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பது தற்போது நிரூபணமாகி உள்ளது. எனவே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து திட்டங்களை போதிய திட்டமிடலும் அமல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

கப்சா நிருபரின் புலனாய்வில், முதல்வர் கே.பழனிசாமி, பொன்.ராதா, ரஜினி கூறிய சமூகவிரோதிகளின் வெறிச்செயல் என கண்டறியப்பட்டுள்ளது. அண்ணாமலை படத்தில் ரஜினி பால்காரனாக சைக்கிளில் சென்று பிழைப்பு நடத்துவார், அவர் டார்ஜிலிங்கில் அளித்த கப்சா பேட்டியில் விஷக்கிருமிகளின் இச்செயலை கண்டித்துள்ளார். ஜி.கே வாசன் அளித்த கப்சா பேட்டியில், “எனது தந்தை ஜி.கே.மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தபோது இந்திய தேர்தல் ஆணையம் அதற்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது. இதனை தொடர்ந்து 1996 முதல் 2001ம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் இந்த சின்னத்தில் போட்டியிட்டு கட்சியின் சார்பில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2001ல் எனது தந்தை மறைவுக்கு பிறகு, கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் கட்சியை 2004ம் ஆண்டு காங்கிரசுடன் இணைத்தேன்.

ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து எங்கள் கட்சியை சேர்ந்த புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து அதே பெயரில் கட்சியை நடத்தி வருகிறார். பின்னர் 2014ல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காங்கிரசிலிருந்து விலகி த.மா.கா (மூப்பனார்) பிரிவை ஆரம்பித்தோம். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தோம். ஆனால், த.மா.கா.வை காங்கிரசுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்சியை அதே பெயரில் தொடர்ந்து நடத்தி வருவதால் சைக்கிள் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த சட்டசபை தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட்டு, தனிமரமாக நின்று தோல்வி அடைந்தோம். சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படாததால் கடும் தோல்வியை சந்தித்துள்ளோம். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி மற்றும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், த.மா.கா.வுக்கு பொது சின்னமாக சைக்கிளை ஒதுக்க முடியாது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். இப்போது மடியில் இடி விழுந்தத் போல் கோவையில் தனது கட்சியின் சின்னமான சைக்கிளை சின்னாபின்னமாக்கிய விஷக்கிருமிகளை கண்டறிந்து களை எடுக்க வேண்டும், அல்லது நவீன ரக துப்பாக்கிகளால் சுட்டுத்தள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிர்