உலக்கைநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களின் பெயர்கள் தெரிந்துவிட்டதால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவராக ‘மூடர்கூடம்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வரும் ‘சென்ராயனும்’ கலந்துக்கொண்டுள்ளார். சிறு, ஆட்டம், பாட்டத்தோடு மைக்கேல் ஜாக்சன் உடையில் இந்த நிகழ்ச்சியில் என்ட்ரி ஆன இவர், தொகுப்பாளர் கமலஹாசனை சந்தித்து பேசிய போது அவருக்கு கை, கால்களே, உதறல் எடுத்து விட்டது. இவரின் படபடப்பை உணர்ந்த கமல்ஹாசன் தோழமையோடு, சென்ராயன் தோள் மீது கையை போட்டு ஏதாவது சொல்லுங்கள் என்று கூறினார். சென்ராயன் அவரை பற்றி சொல்ல துவங்கினார்..இவர்
கமல்ஹாசனிடம் பேசியது…”சார் என்னுடைய பெயர் சென்ராயன், என்னுடைய சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனுர். சினிமாவின் மீது கொண்ட ஆசையால் சென்னை வந்து, 10 வருடங்களுக்கு பின் தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்ததாக கூறினார். பின் தான் முதல்முதலாக பார்த்த திரைப்படம், அபூர்வசகோதரர்கள் என்றும், இரண்டாவதாக பார்த்த படம் சிங்காரவேலன் என்று கூறினார். அதேபோல் தான் சென்னைக்கு வந்ததும் முதல் முதலில் பார்த்த திரைப்படம் ‘குருதிபுனல்’ என்று கூறினார். இதைதொடர்ந்து, தான் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்ட நேரத்தில், உங்களில் இந்தியன் உள்ளிட்ட கிழட்டு கதாபாத்திரத்தில் கமல் நடித்த திரைப்படங்களின் டிக்கெட்டை ப்ளாக்கில் விற்று கூட தன்னுடைய வாழ்க்கயை ஓட்டி உள்ளதாக மிகவும் உணர்சி வசத்தோடு கூறினார்.
வாய்ப்புக்காக காத்திருந்தவர் போல் சந்தடி சாக்கில், காலா கபாலி போன்ற படங்களை ரசிகர்கள் பார்க்க ரசிகர்கள் முதல் நாளே முண்டியடித்துக் கொண்டு 2000 ரூபாய் வரை டிக்கட்களை கள்ளச்சந்தையில் அதாவது பிளாக்கில் வாங்கி பார்ப்பதை கிண்டலடித்தார். காலா என்றாள் பிளாக், பிளாக் டிக்கட் வாங்குவதால் விற்கிறார்கள், விற்பதால் வாங்குகிறார்கல் என்று ‘காலா’ வின் காலை வாரினார். நடிக்க தெரியாத ரஜினியின் படத்தை ஒரு நாள் கழித்து பார்க்கலாம், ஆனால் முட்டாள் ரஜினி ரசிகர்கள் முதல் நாளே படத்தை பார்க்க பிளாக்கில் டிக்கட் வாங்கி குற்றம் புரிகிறார்கள் என்றார். மாட்டிக் கொண்டி சென்றாயன் நெளிந்தார்.
ஒருவகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையை கமலின் நேரடி அரசியலுக்கான விதை என்று கூட சொல்லலாம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் பிரதிபலிப்பு கமலின் அரசியல் நையாண்டிகளிலும் காரமான விமர்சனங்களிலும் சுவாரஸ்யமாக எதிரொலித்தது. இந்த மேடையில் தன்னுடைய அரசியல் நுழைவிற்கான சமிக்ஞைகளையும் கமல் தெரிவித்துக் கொண்டேயிருந்தார். இப்போது அவரே ஓர் அரசியல்வாதியாகி விட்ட சூழலில் அது சார்ந்த பொறுப்பும், கவனமும் அவருடைய உரையாடல்களிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
பிக்பாஸ் இரண்டாவது சீசனில், அந்த வீட்டுக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறையை பார்வையிட்ட கமல் வசதி எதுவும் இல்லாத போலிச் சிறையா என கிண்டலடித்துள்ளார். பிக்பாஸ் முதல் சீசன் நடந்து கொண்டிருந்தபோதுதான் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு அதிக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பரபரப்பாக பேசப்பட்ட அந்த சம்பவத்தை பிபாஸ் நிகழ்ச்சியிலும் பதிவு செய்தார் கமல். வெளியில ஃபைவ் ஸ்டார் சிறையெல்லாம் இருக்கு என சசிகலாவை கிண்டலாக குறிப்பிட்டிருந்தார் கமல். தற்போது இரண்டாவது சீசனில், பிக்பாஸ் வீட்டுக்குள் விதிமுறைகளை மீறுகிறவர்களையும் தப்பு செய்கிறவர்களையும் தண்டிக்க சிறை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறையை பார்வையிட்டார் கமல்ஹாசன். அந்த சிறைக்குள் பார்வையிட சென்ற கமல் சிறைக்குள் மின்விசிறிகள் கூட இல்லையா, அப்போ இது ஒரிஜினல் சிறை இல்லையா எனக் கேட்டுள்ளார். சென்ற ஆண்டு சிறையில் சசிகலா வசதி வாய்ப்புகளை அனுபவித்ததைக் கிண்டலடித்ததை போலவே இந்த முறையும் முதல் நாளிலேயே அரசியல் நெடியுடன் கமல் பேசியுள்ளார்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனைத் தொடர்ந்து தற்போது இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு ரசிகர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், நான், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறீர்கள் என்று கேட்கிறார்கள். என்னுடைய சினிமா வாழ்க்கையில் மக்களுடன் பேசுவதற்கு இது தான் எல்லாவற்றிற்கும் சரியான மேடை என்று நான் உணர்கிறேன் என்றார். மேலும், இதனை சுயநலம் என்கிறார்கள். இது சுயநலம் அல்ல, பொதுநலம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அளித்த கப்சா பேட்டியில், ரஜினிக்கு சீனியர் நான், எனவே நான் சொல்லும்படி தான் க்லீனீங் ஓர்க் செய்ய வேண்டும். பல் துலக்குவது எப்படி, ஆகாரம் சாப்பிட வேண்டும். என்றும் டெமோ காட்டப்போகிறார். இந்த மேடையில் ரஜினியை கலாய்க்க உதவியாக பொது நிகழ்ச்சிகளில் ரஜினி சொல்லும் குட்டிக்கதைகள், கருத்துக்.களை நோட் செய்து வருவதாகவும் கமல் தெரிவித்தார்.
ரஜினியும், கமலும் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்து இருக்கிறார்கள். இருவருக்கிடையேயும் நேரடியாக போட்டி ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. திரைத்துறையில் நண்பர்களாக இருந்த எம்ஜிஆரும், கருணாநிதியும் அரசியலில் எதிரிகளாக மாறியது போல, வருங்காலத்தில் ரஜினியும், கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா? என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவருடனான நட்பு எப்போதும் மாறாது. அதே நேரம் அவரது கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன். கொள்கை விஷயத்தில் என் அண்ணனை கூட நான் விட்டு வைக்க மாட்டேன். அப்படிப்பட்ட சூழ்நிலை அமைந்தால் களத்தில் சந்திக்க தயார்’ என்று கூறினார். கமலின் அண்ணன் சாருஹாசன், கமலால் முதல்வர் ஆக முடியாது என்று காட்டமாக விமர்சிப்பதை பற்றி கேட்டதற்கு, நான் சினிமாவுக்கு செல்கிறேன் என்றபோது, நீ சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்? என்று கேட்டார். இப்போது நன்றாக சாப்பிடும் வசதியை ரசிகர்கள் கொடுத்து இருக்கிறார்கள். தேர்தலில், அரசியல் செயல்பாடுகளில் மக்கள் நீதி மய்யம் பெறும் வெற்றி தான் அவருக்கு பதிலாக அமையும்’ என்றார்.