பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விதிகளை போட்டியாளார்கள் மீறினால் அவர்களுக்கு ‘செட்டப்’ சிறை தண்டனை வரை உண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விதிகளை போட்டியாளார்கள் மீறினால் அவர்களுக்கு பிக்பாஸ் தவறுக்கு ஏற்றாப்போல் சில தண்டனைகள் கொடுப்பார். இப்படி கடைப்பிடிக்கப்படும் ஒரு விதிமுறை… போட்டியாளர்களுக்கு வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது தெரிய கூடாது என்பது. பிக்பாஸ் வீட்டிற்கு கெஸ்ட் யாராவது சென்றால் கூட அவர்களும் இந்த விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும்.
இந்நிலையில், இந்த விதிமுறையை மீறும் விதத்தில் நடிகர் கமல்ஹாசன் நடந்துக்கொண்டுள்ளார். நேற்று அகம் டிவி வழியாக பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த கமல், வெளியுலகில் நடந்த ஆசிரியர் ‘பகவான்’ பற்றி உள்ளே உள்ள போட்டியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டார். போட்டியாளர்கள் பிக் பாஸ் விதியை மீறினால் அவர்கள் எப்படி தண்டிக்கப்படுகிறார்களோ அதே போல் விதியை மீறிய தொகுப்பாளர் கமல் தண்டிக்கப்படுவாரா…? என பலர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பகவான் யாரென்று பார்ப்போம்: மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஒரே நாளில் பிரபலமான ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் பகவான். இவர் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். பகவான் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் 280 பேர், 19ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 20ம் தேதி பள்ளி விடுப்புச் சான்று பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சுற்றிக்கொண்டு கதறி அழுதனர். இதனால் நெகிழ்ந்து போன ஆசிரியரும் பாசம் காட்டும் மாணவர்களை விட்டுச் செல்ல மனமின்றி கண்ணீர் விட்டு அழுதார். மாணவர்களின்
இந்த பாசப்போராட்ட வீடியோ வைரலானது. பல்வேறு ஊடகங்களிலும் ஆசிரியரை பாராட்டியும் மாணவர்கள், ஆசிரியர் உறவு குறித்தும் செய்திகள் வெளியிடப்பட்டன.இதைத்தொடர்ந்து ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தனர். கமல் ஹாசனும் தன் பங்குக்கு விதிகளை மீறி பிக்பாசில் உளறிக்கொட்டினார். மாணவர்களின் பாசப்போராட்ட வீடியோவால், அரசுப்பள்ளி ஆசிரியரும் மாணவர்களும் ஒரே நாளில் பிரபலமாயினர். இதனால் ஆசிரியர் பகவான் பணிநிரவல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் பகவான் வெளியகரம் பள்ளி பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஆசிரியரின் பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கப்சா நிருபர் விசாரித்ததில், பிக்பாஸ் சீசன் ஒன்றில் பொது மக்கள் பிரதிநிதியாக ஜல்லிக்கட்டு ஜூலி என்ற ஜூலியான பங்கேற்று பொய் பித்தலாட்ட திறமையை நிரூபித்து வீட்டை விட்டு வெளியேறி பின் மானாட மயிலாட நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார். இப்போது ஆள் அட்ரசே இல்லை. சீசன் இரண்டில் இந்த யுக்தியை மீண்டும் நடைமுறைப்படுத்த, கமல்ஹாசன் செல்வாக்கை பயன்படுத்தி பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டதாகவும், அவரை சிறப்பு ஹவுஸ்மேட்டாக பிக்பாஸ் சீசன் இரண்டில் நுழைக்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் பிசுபிசுத்து போன பிக்பாஸ் களைகட்டும், டி.ஆர்.பி ரேட்டிங் உயரும், காலா போல் காலாவதி ஆகாமல் விஸ்வரூபமும் (சீசன்) 2 வும் நன்றாக போணியாகும் என கமல் தப்புக்கணக்கு போடுவதாக தெரிகிறது.