சுவிஸ் வங்கியில் 2017 ஆம் ஆண்டில் எப்போதும் போடப்படுவதை விட 50 சதவிகிதம் அதிகமாக இந்தியாவில் இருந்து பணம் போடப்பட்டுள்ளது. 2017ல் மட்டும் மொத்தம் ரூபாய் 7000 கோடி கருப்பு பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் இந்தியாவிற்கு கொண்டு வருவதாக மோடி தேர்தலில் நின்ற போது வாக்குறுதி அளித்து இருந்தார். மோடி கூறிய முக்கியமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. ஆனால் கடைசி வரை கங்கையை சுத்தப்படுத்தாது போலவே, சுவிஸ் வங்கியில் இருந்தும் கறுப்புப்பணம் மீட்கப்படவேயில்லை. மாறாக அங்கு கருப்பு பணம் குறைவதை விட அதிகமாகி உள்ளது.

மோடி பதவியேற்ற போது, சுவிஸ் வங்கியில் போடப்பட்ட பல கோடி கருப்பு பணங்கள் வேறு வெளிநாட்டு வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. முக்கியமாக 2015ம் வருடத்தில் மிகவும் அதிக அளவில் வெளிநாட்டு வங்கிகளுக்கு சுவிஸ் வங்கிகளில் இருந்து பணம் மாறியுள்ளது. மொத்தமாக இந்தியாவை சேர்ந்த 4500 கோடி ரூபாய் பணம் சுவிஸ் வங்கியில் இருந்து வெளியேறி உள்ளது.

ஆனால் மோடி பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், மீண்டும் இந்த பணம் சுவிஸ் வங்கிக்கு திரும்பியுள்ளது. 2016, 2017, 2018 என வரிசையாக பணம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் சுவிஸ் வங்கிக்கு திரும்ப வந்துள்ளது. 2017ல் மிகவும் அதிக அளவில் சுவிஸ் வங்கியில் பணம் போடப்பட்டுள்ளது. சுவிஸ் வரலாற்றில் மிகவும் அதிக அளவில் 2017ல்தான் பணம் போடப்பட்டுள்ளது.

வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல என்று சுவிஸ் வங்கியில் டெபாசிட் இரட்டிப்பானது குறித்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். 2017ல் இந்தியாவில் இருந்து பணம் போட்டவர்களின் எண்ணிக்கை 2016ல் போடப்பட்டதை விட 50 சதவிகிதம் அதிக ஆகும்.

2016ல் சுவிஸ் வங்கியில் 3500 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. 2017 ல் மொத்தம் 7000 கோடி ரூபாய் பணம் இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016 டிசம்பர் வரை மிகவும் குறைவாக இருந்த கருப்பு பண முதலீடு 2016 டிசம்பருக்கு பின் வெகுவேகமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே பாஜக கட்சியில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. பாஜகவை சேர்ந்த பியூஸ் கோயல், அடுத்த வருட தேர்தலுக்குள் கருப்பு பணம் மொத்தமும் கொண்டு வரப்படும். மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

இந்தநிலையில் நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி சுவிஸ் வங்கியில் டெபாசிட் இரட்டிப்பானது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல. சிலர் நேர்மையான வழியில் சேர்த்த பணத்தையும் அங்கு சேர்த்து வைத்து இருக்கிறார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு பின்பு கருப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக மோடி கூறி இருந்தார். ஆனால் இதற்கு பின்புதான் கருப்பு பணம் மிகவும் அதிக அளவில் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் இருந்தால் கண்டுபிடிக்கப்படும். சுவிஸில் டெபாசிட் செய்தவர்கள் பலர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான் இப்படி பணம் போட்டு இருக்கிறார்கள். உள்நாட்டு இந்தியர்கள் பெரிய அளவில் டெபாசிட் செய்யவில்லை. ஸ்விஸ் பேங்க்கில் வெறும் 1 லட்சம் ருபாய் மட்டுமே கள்ளப்பணம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் அவர்கள் மெயின்டனன்ஸ் சர்வீஸ் சார்ஜ் ஆக எடுத்துக்கொண்டதால் இப்பொழுது கருப்பணமே இல்லை. ஏற்கனவே மோடி ஜி சொன்னபடி 15 லட்சத்திற்கு பதில் 30 லட்சமாக ஒவ்வொருவரின் அகவுண்டிலும் கப்சா கணக்கில் வரவு வைக்கப்படும். கூடுதலாக 3 பட்டை நாமமும் இலவசமாக ஆதார் மையங்களில் வரைந்து விடப்படும்.

நன்றி: TP Jayaraman

பகிர்