மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த பின், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலைகளைத் துரிதமாக மேற்கொண்டுவருகிறார் கமல்ஹாசன். அந்த வகையில் சமீபத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. தொடர்ந்து கட்சிப் பணிகளை கவனித்தது வருகிறார். கட்சிப் பணிகளை கவனித்து வரும் அதேவேளையில், சமூக வலைதளங்களிலும் கவனம்செலுத்தி வருகிறார். குறிப்பாக, ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்.

நான்சி என்பவர் கேட்ட கேள்வி இது: அடுத்த தலைமுறைக்கு ஜாதியை நீங்கள் எப்படி எடுத்துச் சொல்லப் போகிறீர்கள்? பள்ளி கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் அது கட்டாயம் இருக்குமா? உங்களது கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்: இந்து சமய முறைப்படி வாணி, இந்தி முறைப்படிசரிகா, லிவிங்டுகெதர் முறைப்படி கவுதமி, ஸ்ரீவித்யா, சிம்ரன், இன்னபிற நடிகைகள் அவர்களது புதிய கணவர்கள் என பல பெற்றோர்கள் கொண்ட என் மகள்கள் இருவரையும் பள்ளியில் சேர்த்தபோது என்ன ஜாதி என்றே வரையறுக்க முடியவில்லை. எனவே கடும் குழப்பத்தில் விண்ணப்பத்தில் ஜாதி, மதத்தை குறிப்பிட நான் மறுத்து விட்டேன். இது அப்படியே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் போகும். அதுதான் ஜாதி, மதத்தை ஒழிக்க ஒரே வழி. இதை ஒவ்வொரு தனி மனிதரும் செய்ய வேண்டும். இதை கேரளா அமல்படுத்த ஆரம்பித்து விட்டது. அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்று கமல் கூறியுள்ளார்.
