“தமிழகத்தில் 7000 கோயில்களில் சிலைகள் கடத்தப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன” என்று சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறியதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, “சிலை கடத்தல்களில் இந்துத்துவா பிரமுகரும் பாஜக தேசிய செயலாளருமான எச்.ராஜாவுக்கு தொடர்பு இருக்கிறது” என்று சமூகவலைதளங்களில் ஒரு பதிவு உலா வர ஆரம்பிக்க அதிர்ச்சி பன்மடங்காக எகிறியது.
இது குறித்து எச்.ராஜாவை தொடர்புகொண்டு உங்கள் நியூஸ் தளத்திற்காக கப்சா நிருபர் சேகரித்த பேட்டி:
கப்சா நிருபர்: “7000 கோயில்களில் சிலைகள் கடத்தப்பட்டு அந்த இடத்தில் போலி சிலைகள் உள்ளன என்று சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இந்துத்துவ பிரமுகர் என்கிற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
எச். ராஜா: ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இதுபோல் அறிக்கை கொடுத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் நானோ…ஏழாயிரம் சிலைகள் அல்ல..ஏழாயிரம் கோயில்களையே காணும் என்கிறேன். பல கோயில்கள் இருந்த இடத்தில்… அங்கே கர்ப்பகிரகம் இருந்த இடத்தில் கட்டிடம் கட்டியிருக்கிறார்கள்.. கடைகள் கட்டியிருக்கிறார்கள். கோயில்கள் இருந்த சுவடே இல்லாமலும் செய்திருக்கிறார்கள். பல்லாயிரம் கோயில்கள் இடிந்து சிதிலமாக கிடக்கின்றன. அறநிலையத்துறைக்கு 38 ஆயிரத்து 635 கோவில்களுள், தற்போது 2 ஆயிரம் கோவில்கள் வரை காணவில்லை. அந்த இடங்களில் எல்லாம் மசூதிகளும் சர்ச்சுகளும் சர்ச்சைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. இந்த ஜோசப் விஜய், சைமன் சீமானை தட்டி வைக்க வேண்டும்.
கப்சா நிருபர்:ஆண்டாள் இழிவுபடுத்தப்பட்டதாக ஆவேசப்பட்ட இந்துத்துவவாதிகள் இந்த கோயில் சிலைகள் குறித்த விசயத்தில் அக்கறை காட்டவில்ல என்று ஒரு விமர்சனம் எழுந்திருக்கிறதே!
எச். ராஜா: நான் முழு அக்கறை காட்டித்தான் வருகிறேன். கோயில்களை, கோயில் சொத்துக்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே நான், “இந்து ஆலய மீட்பு இயக்கம்” என்ற அமைப்பையே துவங்கி இருக்கிறேன். கோயில்களைக் காக்க, சமீபத்தில்கூட ஸ்ரீரங்கத்தில் இந்த இயக்கம் சார்பாக போராட்டம் நடத்தியிருக்கிறேன்.
பதினெட்டுப்பட்டி கிராமங்களை நிர்மூலமாக்கி போடப்போகிற சேலம் எட்டு வழிச்சாலையை மறித்து எட்டு அடிக்கு ஒரு கோயிலை ரோட்டு நடுவே கட்டி இழந்த கோயில்களை சரிக்கட்டுவேன்.
பழனி கோவில் மூலவர் சிலை செய்ததில் மோசடி நடந்ததை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வெளி உலகுக்கு கொண்டு வந்தபோதே, “பழனி கோவிலில் மூலவர் சிலையில் மோசடி நடந்ததுபோலவே தங்க கொடிமரம், சுவாமி புறப்பாடு செய்யும் தங்க வாகனங்கள் போன்றவற்றிலும் மோசடி நடந்திருக்கலாம். தவிர இதே போல காஞ்சிபுரம் ஏகாரம்பரேஸ்வரர் கோவிலிலும், தஞ்சை பெரியகோவிலிலும் சிலை மோசடி குறித்தும் விசாரிக்க வேண்டும். இங்கிருந்த சிலைகள் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருக்கலாம் என தெரிகிறது. இவை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்” என்று அப்போதிலிருந்தே வலியுறுத்தி வருகிறேன். கிருத்துவ ஏசுராஜா இந்தியா வரலாம், நம்ம நடராஜர் வெளிநாடு போகக் கூடாதா? என்பதும் எனது கருத்து.
கப்சா நிருபர்: கோயில் சிலை கடத்தலில் உங்களை தொடர்புபடுத்தி சமூகவலைதளங்களில் ஒரு பதிவு உலா வருகிறதே..
எச். ராஜா: இப்படிப்பட்ட பொய்யான, கீழ்த்தரமான வதந்தியை பரப்புபவர்கள் தி.க., தி.மு.க. ஆட்கள்தான். இவர்கள் கோயில் நிலையத்தில் கல்லூரிகள் மற்றும் வேறு நிறுவனங்கள் கட்டி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நான் எக்ஸ்போஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இதை சமாளிக்க முடியாமல், என்னை அவதூறு செய்யும் விதமாக இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகிரார்கள். இப்படி வதந்தி பரப்பியவர்கள் மீது என்னை மாதிரியே முட்டாப்ப்யலான சைபர் க்ரைமில் இன்று புகார் கொடுத்திருக்கிறேன்.
கப்சா நிருபர்: தங்களுக்கு தமிழக அரசு போதுமான உதவிகளை செய்யவில்லை என்று சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளதே. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
எச். ராஜா: உயர் நீதிமன்றத்தில் அவர் அப்படி சொன்னதாக தகவல் வெளியான போதே, இது குறித்து நான் கருத்து தெரிவித்திருக்கிறேன். “ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை சுதந்திரமாக செயல்பட அணுமதிக்க வேண்டும். அவரது பணிகளில் அரசு தலையிடக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறேன். இதற்காக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா? நான்குநாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வரை நேரடியாக சந்தித்து, இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பாக கோரிக்கை மனுவை அளித்தேன். அதில், “கடந்த 12.2.218 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை உடனடியாக அமல் படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தேன். அதாவது, “ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோயில் சொத்துக்களை முழுவதையும் மீட்டு சந்தை விலையில் வாடைக்கோ, குத்தகைக்கோ விடவேண்டும். ஒரு கமிட்டி அமைத்து ஆறு வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை கண்டறிய வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் நான்கு மாதங்களாகியும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவேதான் தமிழக முதல்வரை நேரடியாக சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தேன். அந்த சந்திப்பின்போது, “பொன்.மாணிக்கவேலை சுந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தேன். அவருக்கு ரவுடிகளை எங்கவுண்டர் செய்யும் வேலை அதிகமிருக்கிறது. இப்போதும் சொல்கிறேன். இந்து ஆலயங்களின் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்க தமிழக அரசு உடனடியாக எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் முன்பு சிதறு தேங்காய் பொறுக்கி தின்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
கப்சா நிருபர்: “சிலை திருடு போன கோயில்களில் ஆசிபா கோயிலில் கற்பழித்துக் கொல்லப்பட்டது போல் கதவு உடைக்கப்படவில்லை. ஏன்னா அங்க கதவே இல்லை. ஆகவே இத்திருட்டுகளில் அர்ச்சகர்களுக்கு பங்கு இருக்கிறது” என்று சிலர் விமர்சிக்கிறார்களே.?
எச். ராஜா: ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு கோயிலிலும் மூலவர் காணாமல் போகவில்லை. உற்சவர்தான் காணாமல் போயிருக்கிறார். பந்தலூர் பசுபதீஸ்வர்ர் கோயிலிலும் இதுதான் நடந்திருக்கிறது. தவிர, சிலை காப்பகம் என்று உருவாக்கி அங்கு வைக்கப்பட்ட சிலைகள்தான் திருடப்பட்டு, போலியான சிலை வைக்கப்பட்டிருக்கிறது. நகைக் கொள்ளையர்களை போலீசார் பிடித்தவுடன் போலி நகை செய்து நகையை தொலைத்தவர்களிடம் கொடுத்து நல்ல நகையை சுருட்டுவது போல் நாங்களும் செய்வோம். அது பாஜக வழக்கம்.
ஆகவே, வக்கிர புத்தியோடு அருவெறுக்கத்தக்க முறையில் எழுதுபவர்கள் சிந்திக்க வேண்டும். தவிர யார் குற்றவாளியாக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சிரிப்பு சேகரைத் தவிர. ஏன் எடுக்கவில்லை என்பதுதான் என் கேள்வி. ஆனால் எஸ்.வி.சேகரை மட்டும் ஒண்ணும் பண்ணிடப் படாது ஏன்னா அவா நம்மவா. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் வைத்த பொட்டை அழித்து சர்ச்சையாகி உள்ளதே..பொது இடத்தில் பொட்டை அழித்து கோடிக்கணக்கான இந்துக்களை ஸ்டாலின் அவமதித்துள்ளார். பொட்டை வைக்கும் முன்னரே பொட்டு வைக்க வேண்டாம் என்று கூறியிருக்கலாம், அல்லது மறைவான இடத்தில் பொட்டை அழித்திருக்கலாம், பொதுமக்கள் முன்னிலையில் பொட்டை அழித்து பொட்டை என நிரூபித்த இந்துக்களை அவமரியாதை செய்துவிட்டார். திமுகவில் இருப்பவர்கள் 90% பேர் இந்துக்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் கூறியபடி அந்த 90% பேர் மானமுள்ள இந்துக்களாக இருந்தால் திமுகவில் இருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். என்கிறார்.