P Bharathiraja, Vairamuthu, Vetrimaaran, Thankar Bachan, Ameer Protest Against The IPL Match In Chennai

படத்திற்கு படம் ‘என் இனிய தமிழ் மக்களே’ என வசனம் பேசும் இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் மீது குடி போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரின் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். இயக்குநர் பாரதி ராஜா மகன் மனோஜ், தாஜ்மகால், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி உள்ளிட்ட சில தோல்விப் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நுங்கம்பாக்கம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, ஸ்டெர்லிங் ரோட்டில் மனோஜ் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மனோஜ்குமார் வாகனத்தை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர். இதில் அவர் மது அருந்தியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது பாண்டிச்சேரி எண் பதிவு கொண்ட காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்துவது குறைவு. காரணம் இளைய தலைமுறைக்கு ஏற்றர்போல் படமெடுக்க தெரியாதது. ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை’ என்ற அமைப்பை நிறுவி, தமிழக பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுத்து துட்டு பார்த்து வருகிறார். இதில் பல சினிமா பித்தலாட்ட கலைஞர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

பாரதிராஜா முன்னதாக எச்.ராஜா வைரமுத்து ஆண்டாள் சர்ச்சை ஏற்பட்டபோது, ஒரு காணொளி வெளியிட்டு ‘எனக்கு ஆயுதமும் ஏந்த தெரியும் என்று கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் ஆளும்கட்சியினரை மிரட்டினார். தொடர்ந்து அரசின் செயல்பாடுகளையும் ஆட்சி செய்யும் பாடுகளையும் விமர்கித்து வந்தார். சேலம் எட்டு வழிச்சாலை போராட்டத்திலும் கலந்துகொள்ள இருந்தார்.

ஐபிஎல் போட்டித் தொடரின்போது, சென்னையில் இருந்து வேறு நகரத்திற்கு போட்டிகளை மாற்ற வேண்டும் என்று நடந்த பிரமாண்ட போராட்டத்தின்போது பாரதிராஜா மற்றும் அவர் அமைப்பும் பங்கேற்றது. அப்போதே போலீசார் பாரதிராஜாவை மொத்து மொத்தென்று மொத்தி எச்சரித்து கைது செய்து விடுவித்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டார். அப்போது ரஜினி போலீஸ் மீது தாக்குதல் நடத்துவது அராஜகம் என்று கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், பாராதிராஜாவின் மகன், ‘சினிமாவில் போணியாகாத லாரி கிளீனர்’ தோற்றம் கொண்டவர் என சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படும் மனோஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை நடத்தி வருகிறார். இதன் மூலம் கணிசமான வருவாய் வருகிறது. தமிழ் திரவிடம் அப்படி இப்படி என்று சொல்லி ஊருக்கு அல்வா கிண்டி கொண்டிருக்கும் பாரதிராஜா. தன் சொந்த மகனுக்கு BMW சொகுசு காசு, வெளிநாட்டு சரக்கு, பொம்பளை, இங்கிலிஷ் என தமிழ் கூறும் நல்லுலகில் வாழ வைத்துள்ளார். தமிழ் பேரை சொல்லி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சிதம்பரம், வைகோ போன்று ஊருக்கு உபதேசம், பிள்ளை ஒரு தத்தெரி என்ற அராத்து பட்டியலில் தவறாது இடம்பெற்றுள்ளார் அவரது மகன் மனோஜ்.

இது குறித்து தேவதைகளின் நாயகன் பாரதிராசா கப்சா நிருபரிடம், “கார் பாண்டிச்சேரி பதிவு எண் கொண்டது. அதனால் இங்கு பறிமுதல் செய்தது தவறு. தமிழ் நாட்டுக்கான வாகன வரி செலுத்தாத வண்டிக்கு தமிழ்நாட்டில் எப்படி கேஸ் போட முடியும்? PY 01 BC 1845 பாண்டிச்சேரியில் பதிவு செய்ட கார், வரி கம்மியாக கட்டி விட்டு சென்னையில் ஓட்டுகிறான் மனோஜ், அதுவும் குடி போதையில். அவன் குடித்தது டாஸ்மாக் சரக்கல்ல, பாண்டிசேரி எனர்ஜி டிரிங்க்கான மஹாப்ஸ் பீச்சு மணலில் புதைத்து வைக்கப்பட்ட அக்மார்க் கிராமத்து புராடக்ட் ஆன ‘சுண்டங்கஞ்சி’ நேராக பாண்டிச்சேரியில் இருந்து வந்து விட்டான், விட்டு விடுங்கள் தமிழர் கலை இலக்கிய பண்பாடு மூடிட்டு குடிகாரர் மீட்பு பண்பாடு அறக்கட்டளை திறக்கிறேன்” என்று கண்கலங்கினார், அப்போது பக்கத்தில் இருந்த உதவியாளர் சரியாக அழுது நடிக்காத்தால், “ஐ வாண்ட் எமோசன்” என்றவாறு கன்னத்தில் பளாரென்று அறைந்தார். அப்பனை போல பிள்ளை. அப்பன் நாட்டை கெடுக்கிறார். மகன் ரோட்டை கெடுக்கிறான். இருவருமே வேஸ்ட்டு. என்றவாறு நடையைக் கட்டினார் கப்சா நிருபர்.

பகிர்