வைகை அணையிலுள்ள நீர் ஆவியாகாமல் தடுப்பதற்காக அணையின் நீர்பரப்பைத் தெர்மாக்கோல் கொண்டு மூடிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் முயற்சி உலக அளவில் பிரசித்தி பெற்றது. இன்றளவும் அந்த முயற்சி விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மீண்டும் வைகையில் கை வைத்திருக்கிறார். மதுரை விரைவில் சிட்னி நகரைப் போல விளங்க போகிறது என மதுரையில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை ஜெய்ஹிந்திபுரம் பகுதியில் அதிமுகசெயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசிய போது தேர்தலில் கூட்டனி இல்லாமல் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி அ.தி.முக.

இந்தியாவில் 3-வது பெரிய கட்சி அதிமுகதான். 30 ரூபாய்க்கு துவரம் பருப்பு வழங்கியது இந்த அரசு. பின்னர் அட்டைகளுக்குள் குழப்பம் ஏற்படக்கூடாது என நிறுத்தப்பட்டது. தற்போது தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலம் நம் தமிழகம் தான்.

தேர்தலை கண்டு அஞ்சாத ஒரு கட்சி அ.தி.மு.க.தான். நாடாளுமன்ற தேர்தல் உடன் உள்ளாட்சி தேர்தல் வர போகிறது. மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் வர இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரை போல் உலகத்தரம் வாய்ந்த பூங்காக்கள் வைகை நதி பாயும் கரை ஓரம் அமைய இருப்பதால் மதுரை விரைவில் சிட்னி நகரைப் போல விளங்க போகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் கப்சா நிருபருக்கு எழுதிய டுபாக்கூர் கடிதத்தில், “அம்மா ஆட்சியில் மக்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன. எதிர்காலத்தில் காளைமாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாற்றாக ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான ‘கங்காரு’வை வைத்து கங்காருக்கட்டு, கங்காருவிரட்டு, கங்காரு தழுவுதல், நடத்த ஏதுவாக, வீட்டிற்கு ஒரு விலையில்லா கங்காரு குட்டி வழங்கப்படும்” என்றார்.

பகிர்