காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் `காலா’ படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்துப் பேசினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இயக்குநர் இரஞ்சித்தை சந்தித்ததாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்போது, ‘மெட்ராஸ்’ கலையரசனும் உடன் இருந்தார். இந்த ட்விட்டர் பதிவில், “நான் டெல்லியில் நேற்று மெட்ராஸ், கபாலி, காலா போன்ற தோல்விப் படங்களை இயக்கிய இயக்குநர் சின்ன திருமா என்றழைக்கப்படும் பா. ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை சந்தித்தேன். நாங்கள் அரசியல், படங்கள் மற்றும் சமூகப் பிரச்னை குறித்துப் பேசினோம். இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. இது தொடரும் என நினைக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக சின்ன திருமா பா. ரஞ்சித் தரப்பில் விசாரித்தபோது, “ பெரிய திருமாவளவன்- ராகுல் சந்திப்புடன் சின்ன திருமா பா. ரஞ்சித் – ராகுல் காந்தி சந்திப்பு தொடர்புடையது கிடையாது. ராகுல்காந்தி தோல்விப்படமான `காலா’ படத்தைப் பார்த்திருக்கிறார். முன்னரே ராகுல்காந்தி ரஞ்சித்தைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். பட வேலைகள் முடிவடைந்து பா. ரஞ்சித் தற்போது வட இந்தியா சுற்றுலா சென்றபோது அவரைச் சந்தித்துள்ளார்.

`காலா’ படம் ராகுலுக்குப் பிடித்திருந்தது. அதனாலே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், பட்டியல் இன மக்களின் மீதான ராகுலின் பார்வை காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களைப் போன்றது இல்லை என்பதால் ரஞ்சித், ராகுலை சந்தித்துப் பேசியதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஜிங்னேஷ் மேவானி இதற்கு முன்னர் சென்னை வரும்போது ரஞ்சித்தைப் பார்த்தார். இந்தச் சந்திப்பு ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதது” என்று முடித்துக்கொண்டார்.

இதனிடையே, பேரறிவாளனை விடுவிக்க உதவ வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் ரஞ்சித் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்துக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று ராகுல்காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி சொல்லி சொல்லியே அரசியல் செய்யவும் தேர்தல் காலங்களில் இந்த விஷயத்தை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தவும் ராகுல் திட்டம் வைதுள்ளதாக தெரிகிறது.

ரஞ்சித் ரஜினியின் அரசியல் ஆசைகளை, அரசியல் எதிர்காலத்தை நிர்மூலமாக்கி ஒரு அரசியல் அனாதை ஆக்கி வைத்ததற்காக, ராகுல் காந்தி அழைத்து பாராட்டியதாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. காரணம், பாஜகவுடன் ரஜினியை இணைப்பதில் ஆர்வம் காட்டிய மோடி, ரஜினியின் வீட்டுக்கே சென்று காலில் விழுந்தார். ரஜினி கை குலுக்கியதுடன் நின்று கொண்டார்.

ஜெயலலிதா கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில், தலைமை வெற்றிடம் கண்டுள்ள சூழலில், ரஜினியின் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த பாஜக தயாராகி வந்த நிலையில், அதனை முறியடிக்க ஏகப்பட்ட திட்டங்களை எதிரிக்கட்சிகளும் உதிரிக்கட்சிகளும் தீட்டி வந்தன.

ரஜினியின் சூப்பர் ஸ்டார் பிம்பத்தை உடைக்கும் வகையில் பொய்யுரை பரப்பப்பட்டது. அவர் மனைவி மீது அவதூறு வழக்குகள், ரஜினியை யார் நீ என கேட்க வைத்தது. உளற வைத்து டென்சனாக்கியது ஆகியவை அடங்கும். ரஜினியின் இமேஜை உடைக்கும் விதமாக சாதியம் பேச வைத்து, அரசியல் வசங்கள் வைத்து, பாஜக எதிர்ப்பு ஸ்ரசியல், தேசிய எதிர்ப்பு வசனங்களை முன்வைத்து ஒரு பொய்ப் பிரசார படத்தை கொண்டு வந்துள்ளார் பா.ரஞ்சித்.

இந்தப்படத்தில் நடிக்கும்போதே தன் இமேஜ் எப்படி பாதிக்கப்படும் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூட இல்லாமல் ரஜினி தனக்குத்தானே தனுஷின் தயாரிப்பு மூலம் குழிவெட்டிக் கொண்டுள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில் பாஜகவுடனான ரஜினியின் நெருக்கத்தை அறுத்துவிட காங்கிரஸ் கன கச்சிதமாக ரஞ்சித் மூலம் தீட்டிய திட்டத்தால் நிரூபித்து விட்டது.

பகிர்