தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆஸ்பத்திரியில் கருணாநிதி சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி செயற்கை சுவாச குழாய் மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம்.
சிறுநீரகப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக கருணாநிதிக்கு காய்ச்சல் வந்துள்ளது. காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலியர்கள் குழு கண்காணித்து வருகிறது. கருணாநிதியின் வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார். ஓ பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும் வருகை தந்துள்ளனர். கருணாநிதி உடல் நலிவுற்று இருக்கும் நிலையில், நலம் விசாரிக்க ஓபிஎஸ் சென்று இருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்த அறிக்கையின் கூடவே வதந்திகளும் வெகுவாக பரவத் தொடங்கியது. இதனால் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டின் முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. கருணாநிதியின் உடல்நிலையை அறிந்துகொள்வதற்காக பல்வேறு கட்சியின் தலைவர்கள் கோபாலபுரம் வீட்டுக்கு விரைந்தனர். அரசியல் தலைவர்கள் அனைவரும் “கருணாநிதிக்கு ஒன்றும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார்” என்று சொல்லியும் தொண்டர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணத்தால் வீட்டைச் சுற்றி அதிக அளவிலான காவலர்கள் பாதுகாப்புக்காக போடப்பட்டனர்.
தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலபுரத்தைவிட்டு வெளியேறியதும் தொண்டர்கள் அனைவரையும் கலைந்து செல்லும்படி தி.மு.க கட்சி நிர்வாகிகள் அறிவுறுத்தினர். ஆனாலும், தொண்டர்கள் அனைவரும் செல்வதாக இல்லை. இதனால் கோபாலபுரம் வீடு பூட்டப்பட்டு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. அப்போதும் தொண்டர்களின் வருகை குறையவில்லை. இந்தநிலையில், அதிக அளவிலான பேரிகார்டுகள் வரவழைக்கப்பட்டு கோபாலபுரத்துக்குள் செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன. நள்ளிரவு 1 மணிக்கு மேல் தொண்டர்கள் கோபாலபுரத்துக்குள் செல்ல காவலர்களால் அனுமதி மறுக்கப்பட்டது.
“கோபாலபுரம் வந்த அரசியல் துரோகிகள் மனிதாபிமானம், நாகரிகமற்றவர்கள், தங்களுக்கு அரசியல் வாழ்வளித்த சசிகலாவின் கணவர் ம நடராகன் இறந்தபோது போனபோது பார்க்கப் போகாதவர்கள் மீண்டும் கோபாலபுரம் வீட்டு வாசலை மிதிக்க கூடாது” என்று கோபமாக கப்சா நிருபரிடம் கூறினார் ஸ்டாலின். அப்போது உடன்பிறப்புக்கள் முகத்தை கோபமாக வைத்துக் காட்டினர்.