சேலம் : சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. அவர் 5 முறை முதல்வராக இருந்தவர். தற்போது எம்எல்ஏ.,வாகவும் இருந்து வருகிறார். அதன் அடிப்படையில் அவருக்கு மருத்துவ உதவி கேட்டால், வழங்க அரசு தயாராக உள்ளது.
நீட் தேர்வு தேவையில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நீட் தேர்வை அமல்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றார்.