தந்தை கருணாநிதி மீண்டு வர வேண்டும்…! குஷ்பூ உருக்கம் ..!

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் மோசமாக உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டு உள்ளார்.

காவிரி மருத்துவமனையும் கருணாநிதி உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது.அதில் கருணாநிதியின் உடல் நலிவடைந்து உள்ளது என்று தெரிவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவரும் கோபாலபுரம் விரைந்தனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில், அரசியல் ஆசானும், எனது தந்தைக்கு இணையான கருணாநிதி அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும்….நீங்கள் விரைவில் குணமடைந்து மீண்டும் வாருங்கள் அப்பா…தமிழ்நாட்டு மக்களுக்காக நீங்கள் வேண்டும் எனவும் உருக்கமாகவும் பதிவிட்டு உள்ளார்.

தற்போது 24 மணி நேரமும் கருணாநிதியை கவனிக்க சிறப்பு மருத்துவ குழு உள்ளது. இது குறித்து பேசிய ஸ்டாலின், காய்ச்சலுக்கு உரிய மருந்து அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

பகிர்