சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை எப்படி சீரானது என்று தெரியாமல் மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள். இத்தனை வயதிலும் அவரது போராட்ட குணம் மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மிகவும் மோசமான நாடித்துடிப்பில் இருந்து அவர் மீண்டு வந்தது மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது.
3 தடவை கடந்த 4 நாட்களில், கருணாநிதியின் உடல்நிலை மூன்று முறை மோசமானது. 26ம் தேதி மாலை, 27ம் தேதி நள்ளிரவு மற்றும் 29ம் தேதி மாலை என்று மூன்று முறை உடல்நிலை மோசமானது, இதில் 27ம் தேதி உடலில் மிகவும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டது. 29ம் தேதியான நேற்றுதான், மிகவும் அதிக அளவில் உடலில் பிரச்சனை ஏற்பட்டது. 3 விதமான பிரச்சனை கருணாநிதிக்கு மொத்தம் 3 பிரச்சனைகள் இருக்கிறது. அவருக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது. அதன்பின் கடைசியாக, இரத்த அழுத்தம் ஏற்பட்டது. இந்த மூன்று பிரச்சனையும் மாறி மாறி வந்ததால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. தற்போது இதில் ரத்த அழுத்தம் மட்டும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மாறாக சிறுநீரக தொற்று இன்னும் குணமாகவில்லை.
பெரிய ஆச்சர்யம் இந்த 94 வயதில் ஒரு நபர், இப்படி குறைபாடுகளை வைத்துக்கொண்டு வாழ்வதே ஆச்சர்யமான விஷயம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். முக்கியமாக சிறுநீரக நோய் தொற்று, ஏற்பட்டு இருக்கும் ஒருவர், இவ்வளவு வயதில் உயிரோடு இருப்பதே கஷ்டம் என்று கூறப்படுகிறது. அதோடு காய்ச்சல், ரத்த அழுத்தம் என்று சேர்ந்து அவர், மூன்று பிரச்சனைக்கும் மத்தியில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார். இது மருத்துவர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. நாடித்துடிப்பு 35 74ல் இருந்த நாடித்துடிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நேற்று 35ல் வந்தது. இதனால்தான் அவரது உடல்நிலை மோசமாகி பெரிய பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், நேற்று இரவே அவரது நாடித்துடிப்பு மீண்டும் 70 ஐ அடைந்தது. இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று தெரியாமல் மருத்துவர்கள் இப்போதும் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள்.