சென்னை:
திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
அதன் பின்னர் காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. அவரது உடல் நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியை பார்க்க தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் அங்கு சென்றனர்.
கருணாநிதிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு சீரானது. எனவே தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என விசி கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மருந்துகள் அனைத்தும் அவரின் உடலுக்கு ஒத்துக்கொள்கிறது. இந்தியாவின் மூத்த தலைவர் கருணாநிதி விரைவில் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன். ராகுல் காந்தியின் ஆலோசனைப்படி குலாம் நபி ஆசாத் வருகைதர உள்ளார் என தெரிவித்தா
பகிர்