கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து திமுக தொண்டர்கள், பொதுமக்கள் காவேரி மருத்துவமனையின் முன்பு ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர். கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் இன்று 5 வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பு இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார். பின்னர், நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியதாவது,

கருணாநிதி என்றைக்குமே ஒரு போராளியாக இருந்திருக்கிறார். இன்றும் அவர் ஒரு போராளியாக இருக்கிறார். கருணாநிதி பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருக்கிறது. காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் ரொம்ப நல்லபடியாக அவரை கவனித்து வருகிறார்கள். இவரைப் போன்ற தலைவர் நம் எல்லோருக்கும் தேவை” என்று கூறினார்.

பகிர்