தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரியும், அவரின் சகோதரர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினும் நேரடியாக சந்தித்து பேசி, நீண்ட நாட்களாகின்றன. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குன்றிய பின், சென்னைக்கு வந்த அழகிரி, கோபாலபுரம் வீட்டில், ஸ்டாலினை சந்திக்க நேர்ந்தாலும், இருவரும் பேசிக் கொள்வதில்லை. தங்களுடைய கருத்துகளை, குடும்பத்தினர் வாயிலாகவே வெளிப்படுத்தினர்.

கடந்த, 20ம் தேதி, கோபாலபுரம் வீட்டில், கருணாநிதி உடல் நலம் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், இருவரும் பேசிக் கொள்ளவில்லை. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியைப் பார்க்க, யார் யாருக்கு அனுமதி தர வேண்டும் என்ற முடிவை, ஸ்டாலின் தான் எடுக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், கருணாநிதிக்கு அளிக்கும் சிகிச்சை தொடர்பாக, அழகிரி சில ஆலோசனைகளை, ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஸ்டாலின், ‘அப்படியே செய்திடலாம்’ என, சம்மதம் தெரிவித்துள்ளார். அண்ணனும், தம்பியும் நீண்ட இடைவெளிக்கு பின் பேசியதை பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் இரட்டை முதல்வர்கள் பழனிசாமி பன்னீர்செல்வம் இருவருக்கும் தக்க பதிலடி கொடுக்க ஸ்டாலின் அழகிரி வியூகம் அமைத்து வருவதாக உடன்பிறப்புக்கள் தெரிவித்தனர். கருணாநிதியை அம்போ என விட்டுவிட்டு, கருணாநிதி போலவே ஐசி யூவில் இருக்கும் திராவிட முன்னேற்ற கழக கட்சியை பலப்படுத்தும் ஆலோசனை குறித்து கொடூர ஆலோசனை நடைபெறுவதாக தெரிகிறது. சொந்த மருத்துவமனை என்பதால் ஒரு பயல் வாயில் பல் போட்டு கேள்வி கேட்க முடியாது. “ஒரு மருத்துவமனை விளம்பரப்படுத்தப்படுகிறது ” என்று ஒரு சீரியல்/சினிமா எடுக்கலாம் என சன் பிக்சர்ஸ் யோசனை செய்து வருவதாகவும் கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இவ்ரகள் ஒற்றுமை சொத்தை பங்குபோட தான். மத்தபடி அப்பாவின் மேல் பாசம் எல்லாம் இல்லை. அவர்கள் குடும்பத்தார் காரில் வந்து பார்த்து விட்டு இரவில் தூங்க வீட்டுக்கு போய்விட்டார்கள் . பாவம், பைத்தியக்கார மக்கள் மழையில் நின்று அழுது கொண்டிருகிறார்கள் . மக்களுக்கு இப்பொழுதும் புத்தி தெளியவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் அழுது கொண்டிருக வேண்டிதுதான். என்கிறார் நமது (காவேரி மருத்துவமனையில் ஓசி பிரியாணி கிடைக்காத) கப்சா நிருபர்

பகிர்