திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்தம் காரணமாக சமீபத்தில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள் கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருணாநிதியை பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இன்று இரவு கருணாநிதி உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உட்பட அனைவரும் காவேரி மருத்துவமனை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உடல் நிலை சீரடைந்தது. மருத்துவமனை சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் காவேரி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.