கருணாநிதியின் உடலை சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தயாராக இருப்பதாக ஓபிஎஸ் ஈபிஎஸ் வசமுள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது. “காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.

அதற்கு மாறாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே உள்ள காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்” என தமிழக அரசு சார்பில் அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிக்கைக்கு பிறகு, “80 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான தலைவர் கருணாநிதிக்கு, அவர்களுக்குரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் சென்னை காமராசர் சாலையில், அண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்திற்குள் அவரின் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கிடுமாறு முதலமைச்சரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய, ஸ்டாலின் கையெழுத்திட்ட மனுவை தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுகவினர் வழங்கினர். “அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படும். கருணாநிதியின் உடல் மீது தேசிய கொடி போர்த்தி ராணுவ மரியாதையுடன் குண்டு முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்படும்” எனவும் தமிழக அரசின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழக அரசு சார்பில் ஏழுநாள் துக்கம் அனுசரிக்கப்படும்; தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு, அரசு சார்ந்த விழாக்கள் ரத்து செய்யப்படும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலும் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது திமுகவை சேர்ந்தவர்களின் பெரும் விருப்பமாக இருந்தது. எனவே மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க இயலாது என்ற தமிழக அரசின் அறிக்கைக்கு பிறகு காவேரி மருத்துவமனையில் கூடியிருந்த தொண்டர்கள் `வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும்` என்ற கோஷங்களை ஆக்ரோஷமாக எழுப்பி வருகின்றனர்.

பின்னர் விசாரித்ததில் ஜெயலலிதா சமாதியை எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்தது போல், அண்ணா சமாதியில் கலைஞர் சமாதியை அடக்கம் செய்ய உதவுங்கள், அல்லது, தயவு செய்து மெரீனா சமாதியில் கருணாநிதி படத்தையாவது மாலை போட்டு வணங்க அனுமதி அளிக்குமாறு ஸ்டாலின் கதறியதாக கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழ், ஊழல், பேராசை, கொள்ளை, சொத்து, மகன், மகள், பேச்சு, மனைவி, துணைவி, முதுமை, இனாம், ஓட்டு, விரோதி, சினம், சிலேடை, என பல மூன்றுழுத்துக்களோடு போராடி வென்ற கருணாநிதி, ‘உயிர்’ என்ற மூன்றெழுத்தை விட்டு கடமை என்ற மூன்றெழுத்தை முடித்துக் கொண்டு ‘உலகு’ என்ற மூன்றெழுத்தி விட்டு போன பின்பும் ‘மெரீனா’ என்ற மூன்றெழுத்துக்காக ‘மவுன’ போராட்டமும் இட ஒதுக்கீடு போராட்டமும் செய்ய வேண்டி வந்துவிட்டதே, என ‘கப்சா’ கவிஞர் இரங்கற்பாவில் பாடியுள்ளார்.

பகிர்