சென்னை மெரீனாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கவிஞர் வைரமுத்து பாலூற்றி அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார்.

புதனன்று சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு பெருமளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதியின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கவிஞர் வைரமுத்து பாலூற்றி அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. வியாழன் காலை கவிஞர் வைரமுத்து தனது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலனுடன் அண்ணா நினைவக வளாகத்திற்கு வருகை தந்தார்.அதனை வலம் வந்த அவர் பாட்டில் ஒன்றில் வைத்திருந்த பாலினை ஊற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்கவே முடியவில்லை. ஒரு தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக கருணாநிதி சமாதியில் பால் ஊற்றிச் செல்கிறேன். சூரியன் இல்லாமல் விடியல் வருமா என்பதை போல உள்ளது கருணாநிதியின் மறைவு. இவ்வாறு அவர் தெரிவித்தார். கூடவே சுடசுட ஒரு இரங்கற்பாவை பாடினார்:

பகுத்தறிவிற்கப்பால்! ஆரோக்யா பால்!

அவர் மேல் தூவிய பூக்கள் வாசம் பெற்றன!

ராஜ சொர்க்கம் இனி புகுவோனுக்கு இனிப்பளித்தேன்!

தமிழ்பால் கொண்ட அன்பால்

ஆவின் பால் தெளித்தேன்!

அறத்துப்பால் அளிக்க நான் அந்தணன் இல்லை

பொருட்பால் அளிக்க நான் வணிகன் இல்லை!

இன்பத்துப்பால் அளிக்க நான் இடையன் இல்லை

கவிஞன் என்பதனால் காமத்துப்பால் அளிக்கிறேன்!

கடலும் நிலமும் உரசிக் கொள்ளுமிடம்

கலைஞருக்கான உறைவிடம்!

வெந்தணல் கொண்டெரித்து

அந்தணன் வரத் தேவையில்லை

பாசறையில் பயின்ற

மாசற்ற தொண்டனே போதும்!

பகுத்தறிவெல்லாம்

பட்டி தொட்டிக்கு

பக்குவமாய்

பக்தி செய்வோம்

பாங்குரவே வளம் பெறவே

சீரிய செல்வம் சேர

வீரியமாய் கும்பிடு

உடன்பிறப்பு என்பதெல்லாம்

சும்மா உவ்வலாகாட்டிக்கே.!

 

ஆனால் வைரமுத்துவின் இந்த செய்கை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமயச் சடங்குகளுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றை தனது இறுதி வரை கடைபிடித்தவர் கருணாநிதி.

அவரது நல்லடக்கத்தின் போது கூட எந்த விதமான சடங்குகளும் பின்பற்றப்படவில்லை. ஆனால் தற்பொழுது வைரமுத்து தனது செய்கையின் மூலமாக அதற்கு ஓர் களங்கத்தை உண்டாக்கி விட்டார். இவ்வாறு பல்வேறு விதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது.

குடும்ப உறுப்பினர் செய்ய வேண்டியதை ஸ்டாலின் சொற்படி பால்மாறாமல் கடைபிடித்தாரா வைரமுத்து என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி யார் காரியம் செய்தாலும் சொத்திலிருந்து பங்கு தர வேண்டுமாம் இதனால் கருணாநிதியின் உறவுகள் கலக்கமடைந்துள்ளனர்.

வைரமுத்துவால் கருணாநிதியின் பகுத்தறிவிற்கு பால் ஊற்றப்பட்டது.  சன் ரைஸ் காப்பியாக ஊற்றியிருந்தால் மகிழ்ந்திருப்பார். சிலைக்கு எதற்குப் பால் என்றவர்கள் சிமெண்ட் ஸ்லாப்புக்கு எதற்கு பால் ஊற்றினார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. பிற்பகல் லேக்டோமீட்டருடன் அங்கு மாறுவேடத்தில் வந்த பால்வளவளாத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வைரமுத்து ஊற்றிய பாலில் கலப்படம் உள்ளது என்று கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது என் கப்சா நிருபர் தெரிவிக்கிறார்.

பகிர்