சென்னை : சென்னை மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அழகிரி, குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, எனது மனதில் உள்ள ஆதங்கத்தை என் அப்பாவிடம் வேண்டிக் கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்னுடன் இருக்கிறார்கள். எனது ஆதங்கம் கட்சி தொடர்பானது. குடும்பம் தொடர்பானது அல்ல.
அனைத்திற்கும் காலம் பின்னால் பதில் சொல்லும். நான் தற்போது திமுக.,வில் இல்லை. அதனால் நாளை நடைபெற போகும் செயற்குழு பற்றி எனக்கு தெரியாது. மீண்டும் திமுக.,வில் இணைவது பற்றி எனக்கு தெரியாது என்றார்.

தொடர்ந்து டைம்ஸ் நவ் டிவி.,க்கு அழகிரி அளித்த பேட்டியில், நான் கட்சிக்கு வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. பல திமுக தலைவர்கள் ரஜினியுடன் தொடர்பில் உள்ளனர். கட்சி பொறுப்புக்கள் விற்கப்படுகின்றன. தற்போதைய தலைவர்கள் கட்சியை அழித்து விடுவார்கள். அவர்களை கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும் என்றார்

பகிர்