முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க.முத்து இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தலைவா்கள், பொதுமக்கள் என பலரும் தொடா்ந்து வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.
கருணாநிதியின் மறைவிற்கு குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்திய நிலையில் அவரது மூத்த மகன் பிரபல திரைப்பட நடிகர் மு.க.முத்து மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் மு.க.முத்து இன்று கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
உடல் நலிவுற்ற நிலையில் மு.க.முத்துவை அவரது குடும்ப உறுப்பினா்கள் சிலா் தாங்கி பிடித்தவாறு அழைத்து வந்தனா். இதனைத் தொடா்ந்து பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனா். விடுமுறை தினம் என்பதால் இன்று கருணாநிதியின் நினைவிடத்திற்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனா்.
கருணாநிதி புதைக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் மு.க.முத்து அஞ்சலி செலுத்தியது பார்க்க பரிதாபமாக இருந்தது. எவனெவனோ நல்லாயிருக்கான் கலைஞர் மூத்தமகன்னு ஆய்போச்சி கலங்க விட்டால் அவங்க குடும்பத்துக்குதான கெட்ட பெயர் அவரையும் வாழ வையுங்களேன். ஒரு கடை கோடிய பிச்சுபோட்டாகூட போதும். கையில் காசு இல்லை என்றால் முறைப்படி பிறந்த மகன் மு.க.முத்து கூட மூன்றாம் நாள் தான் கருணாநிதியின் சமாதியில் முறை செய்ய முடியும் என்பது அதிரிச்சிகரமான உண்மை என்றும், அங்கிருந்தவர்கள் ஸ்டாலின் அழகிரி கொழுத்த அளவிற்கு மு.க.முத்து மக்கள் பணத்தை ஆட்டையை போட திறமை உள்ளவர் இல்லை’ என கிசுகிசுத்தது காதில் விழுந்தது.
கப்சா நிருபர் செய்த புலனாய்வில் மு.க.முத்து எம்.ஜி.ஆர். காலத்திலேயே திரைப்பட நடிகர் என்பதும் லதா, மஞ்சுளா என எம்.ஜி.ஆரின் கதாநாயகிளுடன் எம்.ஜி.ஆர் போலவே கன்னத்தில் கன்னம் உரசி எமரி ஷீட் போட்டு டூயட் பாடியவர் என்பது தெரிந்தது. யூட்யூப்பில் மு.க.முத்து பாடல்கள் என டைப் செய்தால் டஜன் கணக்கில் அந்தக்கால குத்தாட்ட பாடல்கள் வந்து குவிகின்றன.
மேலும் தகவலுக்கு, மு.க. முத்துவின் மகன் நடிகர் விக்ரமின் மருமகன் என்றும், மு.க.முத்துவின் மருமகன் கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்பதும் தெரியவந்தது. எனவே ஸ்டாலின் அழகிரி போல் தமிழ் நாட்டை கூறுபோட்டதில் இவரும் கொஞ்சம் கொழுத்த பணக்காரர் தான் என உறுதியாகிறது.