கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தவரும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளது திமு கழகம். தலைவருக்கும் அஞ்சலி செலுத்தவரும் பொதுமக்கள் பசியாற உணவருந்த இந்த “சமாதி சாப்பாடு” என புதிய டிரெண்ட் உருவாக்கியுள்ளனர் திமுகவினர்.

உடல்நலக்குறைவு காரணமாகவும் வயது மூப்பாலும் கவலைக்கிடமாக இருந்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி சமீபத்தில் காலமானார். அவரின் இழப்பால் தமிழகமே வேதனையில் ஆழ்ந்திருக்கிறது. தமிழுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டுகள் பல. இதனால அவருக்கு தொண்டர்களும் பலர்.

எண்ணிலடங்கா இந்த தொண்டர்கள் வேதனையில் ஒரு புறம் துடித்துக் கொண்டிருக்கையில். அவரது ஆசையை நிறைவேற்ற போராடிக் கொண்டிருந்தது இன்னோரு கூட்டம். அறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பியான கலைஞர் தன்னுடைய மரணத்திற்கு பிறகும் கூட அண்ணாவின் அருகிலேயே தான் புதைக்கப்பட வேண்டும் என விரும்பினார். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதில் பெரிய தடையாக இருந்தது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இடம் தர முடியாது என அவர் மறுத்துவிடவே தொடர்ந்து கலைஞருக்காக போராடி நீதிமன்றத்தில் இடம் பெற்றனர் தொண்டர்கள்.

மரணத்திற்கு பிறகும் கூட போராட்டம் எனும் படி, தன் உயிரினும் மேலான அன்பு அண்ணனின் அருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, கருணாநிதியின் ஸ்டாலின், கனிமொழி மற்றும் அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர், மூத்த மகன் மு.க.முத்து கடைசி ஆளாக போனால் போகிறதென்று அனாதையாக வந்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் கல்லாப்பெட்டி கவிஞர் வைரமுத்து தனது இரு மகன்களுடன் மெரினா கருணாநிதி சமாதிக்குச் சென்று பாலூற்றி மலர்களை வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியை இழந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் வைரமுத்து பாலூற்றும்போது கண்ணீர் விட்டு அழுதார். குடும்பத்தினர் செய்ய வேண்டிய வேலையை கிறித்தவரான இவர் ஏன் செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது. கப்சா நிருபர் புலனாய்வில் பகுத்தறிவு தடுத்ததால் வீட்டில் படுத்துக் கொண்டே ஸ்டாலின்  வைரமுத்துவை அனுப்பியது தெரிந்தது.

கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மேடை கிரானைட் கற்கள், டைல்ஸ் கற்களால் அழகாக கட்டமைக்கப் பட்டுள்ளது. அடக்கம் செய்யப் பட்ட பகுதியில் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, பப்பாளி, அன்னாசி மற்றும் பல்வேறு மலர்களைக் கொண்டு நேற்று உதயசூரியன் சின்னம் போல அலங்கரிக்கப்பகிறது. பழங்களாலும் பூக்களாலும் கலைஞர் சமாதி விழாக்கோலம் பூண்டு திந்திமி விளங்கியது பார்க்க பேரதிர்ச்சியாக இருக்கிறது. கோயம்பேட்டில் கீழே சிந்திய காய்கறிகளையும் கார்பைடு கல்ல் வைத்து ரசாயன முறையில் பழுக்கவைக்கப்பட்ட பிராடுத்தன பழங்கள் பயன்படுத்தப் பட்டன என தெரிந்தது. மகாபலிபுரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை அடியாட்களை வைத்து மிரட்டி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வைத்து, சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பினார்கள்.

சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டதையொட்டி, கருணாநிதி சமாதியில் ஆக.15 வண்ண பூக்களால் தேசிய கொடி வடிவில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதன் கீழ் தி.மு.க.வின் உதயசூரியன் வடிவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இப்படி நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக வண்டலூர் பூங்கா, சில்ரன்ஸ் பார்க் போல் மக்கள் குழந்தைகளுடன் உடன்பிறப்புக்களின் வேடிக்கை விநோதங்களை பார்த்து களித்து வருகின்றனர்

தற்சமயம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் கருணாநிதி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை திரும்ப திரும்ப ஒளிபரப்பி, இறந்தது வாஜ்பாயா மீண்டும் கலைஞரா என சந்தேகம் வரும்வரை டிவி ரிமோட்டை தேய்த்தார்கள். இன்னைக்கோ நாளைக்கோ என இழுத்துக் கொண்டிருக்கும் மூத்த அரசியல்வாதிகளுடன் கலைஞர் எடுத்துக் கொண்ட போட்டோக்களை சேகரித்து வருகின்றனர் உடன்பிறப்புக்கள்.

இத்தனை நாட்கள் ஆகி, இன்றும் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்காண தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தவரும் பொதுமக்களுக்கு இலவசமாக பிரியாணி, குவார்ட்டர் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. தலைவருக்கும் அஞ்சலி செலுத்தவரும் பொதுமக்கள் மீட்டிங்குகளில் கூட்டம் கூட்டப்படுவது போல ருசியாக பசியாற உணவருந்த இந்த “சமாதி சாப்பாடு” என புதிய டிரெண்ட் உருவாக்கியுள்ளனர் திமுகவினர். வரமுடியாதவர்களுக்கு தேர்தல் பூத்துகளுக்கு ஏற்பாடு செய்யும் வேன்களை ஏற்பாடு செய்து திமுக் கஜானாவை காலியாக்கி தெறிக்க விட்ட் வருகின்றனர்.

பகிர்