சென்னை: சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சேலம் – சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகில் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன், பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராமன் அமர்வு சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுபாக்கூர் பேட்டியில் பேசியதாவது, “சேலம் – சென்னை 8 வழிச்சாலை வளர்ச்சித் திட்டம் கிடையாது. ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் சேலம்-சென்னை இடையே உள்ளது. அரசின் வீம்பினால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கும் நீதிமன்றத்துக்கும் அரசு பொய் தகவலை தருகிறது, இந்த வெற்றி பாமகவுக்கு ஒரு ஆரம்பம் தான் மெல்ல டாஸ்மாக், சிகரெட்டு கம்பெனிகளை மூடிவிட்டு, மக்கள் முதல்வராக தமிழக சட்டசபையை அலங்கரிப்பேன். அடிதடிபுகழ் சிலுப்பி வில்லன் மன்சூர் துணையுடன் எதிர்ப்புகளை சமாளிப்பேன்.” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதேபோல் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நடிகர் மன்சூர் கப்சா நிருபரிடம் “அன்புமணி அண்ணன் தான் அடுத்த மக்கள் முதல்வர், இதே போல் அதிமுகவின் திட்டங்களை தவிடு பொடி ஆக்கினார் எனக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி தருவதாக சொல்லி இருக்கிறார்” என்றார். இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பகிர்