ஜெயலலிதாவின் தோழியும், சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவருமான சசிகலா தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை டிடிவி தினகரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதிரியாக அறியப்பட்டவர் சசிகலா. சுமார் 30 ஆண்டு காலமாக அவருடன் இருந்த சசிகலா அதிமுக கட்சியின் அசைக்க முடியாத ஆளுமையாகவும் இருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பை வெளியிட்டது. அதில் ஜெயலலிதா மறைந்த காரணத்தினால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சசிகலா, அவரது அண்ணன் மனைவி இளவரசி, அவரது அக்கா மகன் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் பெங்களூரு பரபரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக கட்சியை வசப்படுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ. பன்னீர் செல்வம் இருவரும், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு கட்சியையும், ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். அதன்பின்னர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா உள்ளார்.

ஆகஸ்டு மாதம் சசிகலா 61வது பிறந்தநாள் காண்கிறார். இதனையொட்டி, சிறையிலுள்ள பிற கைதிகளுக்கும் அவர் இனிப்புகளை வழங்கப்பட்டது. தொடர்ந்து டிடிவி தினகரன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சசிகலாவின் பிறந்தநாள் என்பதால் அமமுக-வின் மாவட்ட செயலாளர்கள், கழக உறுப்பினர்கள்,தொண்டர்கள் என ஏராளமானோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை முன்பாக குவிந்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய சசிகலாவை டிடிவி தினகரன், அவரின் மனைவி உள்ளிட்ட சிலர் பெங்களூர் சென்று அவரை சந்தித்து விட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று திடீரென சசிகலாவிற்கு மயக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின் அவர் கண் விழித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜெயலலிதா படங்களில் மயக்கம் போட்டு விழுந்தது போல் விழுந்து கண்விழித்து, சினிமாவில் பிரபலமான வசனம், ‘இது எந்த இடம், நான் எங்க இருக்கேன்’ என நடித்துக் காட்டினார். பெரும்பாலும் சசிகலா தனது காலை உணவை தவிர்த்து விடுகிறாராம்.

மேலும், கடந்த சில நாட்களாகவே சர்க்கரை மாத்திரைகளை சரியாக அவர் எடுத்துக்கொள்வது இல்லையாம். இதன் காரணமாகவே அவருக்கு சர்க்கரை அளவு அதிகரித்து மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரமற்ற ஈபிஎஸ் தரப்பு அதிமுக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் சசிகலாவை, வெளியே அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது போல் சொகுசு பங்களாவில் மிச்ச வாழ்க்கையை, அந்திம காலத்தை கழிப்பது தொடர்பாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள் என செய்தி கசிந்துள்ளது.

பகிர்