சமீபத்தில் ஈரோடு புத்தக திருவிழாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு ‘‘சினிமாயணம்’’ என்ற தலைப்பில் பேசினார். “சினிமாவுக்கு வருவதற்கு முன் ஆரம்பத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். சின்னம்மா கண்டிப்பில் நல்ல பிள்ளையாக வளர்ந்தேன். கே.பாக்யராஜிடம் சேர்ந்து அவருக்கு உதவியாளராக பணிபுரிந்தேன். இப்போது என்னிடம் 60 கதைகள் உள்ளது. இவற்றை எல்லாம் படம் எடுக்கு 600 கோடி வேண்டும். இதற்கு நான் எங்கே போவேன்?

அரசியல் தலைவர் ஒருவர் என்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். கட்சியில் இணைந்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது. ஆனால் அரசியல் பேசுவேன். முன்பு கலைஞரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கைது செய்த போது இதை கண்டித்து நான் பேட்டி கொடுத்தேன். இதை கேட்டு ஜெயலலிதா சிவகுமார் சாரிடம் பார்த்திபன் கூறியதை கேட்டீர்களா? என்று கேட்டு வருத்தப்பட்டாராம்.” என்று கூறியிருந்தார்.

இது இப்படியிருக்க, கோயம்முத்தூரில் ‘மறக்க முடியுமா கலைஞரை?’ என்ற தலைப்பில் திரையுலகினர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவையில் புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர். அப்போது பேசிய பார்த்திபன், “சூரிய வணக்கம் என சொல்லி பேச ஆரம்பித்தார். சூரியன் மறைந்த பிறகு என்னை பேச அழைத்துள்ளீர்கள் என்ன பேசுவதென தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

“தமிழ் உயிர்போன்றது.. கலைஞர் மறைந்த பிறகு தமிழுக்கு உயிர்போனது” என உருக்கமாக பேசினார். கலைஞருக்கும் பார்த்திபனுக்கும் இடையேயான பழக்கத்தை குறிப்பிட்டார். கீழே இருக்கும் உயர்ந்தவர்களைப் பற்றி பேசப்போகிறேன் எனக் கூறி, ஒவ்வொரு முறையும் உடன்பிறப்புகளே என அழைத்த இந்த தொண்டர்களிடத்தில் கலைஞரை பார்க்கிறேன். திமுக தொண்டர்களை கட்டுக்கோட்போடு வைத்திருந்தார் கலைஞர் என்று சொல்வது உண்மையல்ல. அப்படி எல்லோரையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியாது. அது தொண்டர்களே கட்டுக்கோப்பாக இருந்தார்கள் என புகழ்ந்தார்.

கலைஞருக்கு பிறகு, அவர் அவருடைய உடன்பிறப்புகளுக்கு சரியான கலங்கரை விளக்கத்தை அடையாளம் காட்டிவிட்டு தான் சென்றுள்ளார். அந்த கலங்கரை விளக்கம் வேறு யாருமில்லை நம் செயல் தலைவர் ஸ்டாலின் தான். அவருக்கு பிறகு தமிழகத்தின் கலங்கரை விளக்கமாக ஸ்டாலின் நிச்சயம் இருப்பார் என்று கூறிய பார்த்திபன் தலைவர் கலைஞர் இறந்த பிறகு எப்பொழுதும் சோகமாகவே காணப்படும் செயல் தலைவருக்கு நான் ஒரு டானிக் தரப்போகிறேன் என்று கூறி, அவரை மேடைக்கு அழைத்து கலைஞரின் அடையாளமான மஞ்சள் துண்டை ஸ்டாலின் மீது பார்த்திபன் அணிவித்தார். அதிகமாக பேசுவதை விட இதுதான் சரி எனக் கூறினார். மேலும், கரை வேட்டி கட்டிக்கொண்டு கொள்கை பேசமாட்டேன் என சொன்ன பார்த்திபன், தன்னுடைய கண்களிலேயே கருப்பு சிவப்பு இருப்பதாகக் கூறினார்.

மருத்துவமனையில் இருந்தபோது மருந்துகளுக்கு பதிலாக கையில் ஒரு பேனாவையும், எழுத ஒரு அட்டையையும் கொடுத்திருந்தால் இன்னும் நான்கைந்து வருடங்களுக்கு உயிருடன் இருந்து ஹண்ட்ரட் நாட் அவுட் என இருந்திருப்பார் என கலைஞரின் இலக்கிய ஆர்வத்தை புகழ்ந்த பார்த்திபன், தொண்டர்களின் வழியே கலைஞரை காண்பதாகக் கூறி உரையை நிறைவு செய்தார்.

இதன் மூலம் பார்த்திபனுக்கு 100 கோடி ஆஃபர் தந்தவர் ஸ்டாலின் என்பது நிரூபணமாகிறது. சினிமாவில் வாய்ப்பிழந்து வாய் பிளந்த பார்த்திபன் சுட்ட கன் வித்த கன் என போணியாகாத படங்களை எடுத்து தயாரிப்பாளர்களை நோகடித்தார், இப்போது அரசியலில் மக்கள் பணத்தை ஆட்டையைபோட கிளம்பிவிட்டார் என்கிறார்கள்.

பகிர்