திமுக தலைவராக ஸ்டாலின் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகிறார் என்று அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்தார். இந்நிலையில் திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28-இல் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்காக வேட்புமனுவை தாக்கல் செய்ய 26-ஆம் தேதி நடைபெறும் என்றும் மனுக்களை வாபஸ் பெற 27-ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி திமுக செயல்தலைவராக இருந்த ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டனர். நேற்றைய தினம் இரு பதவிகளுக்கும் ஸ்டாலின், துரைமுருகனை தவிர வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை என்பதால் இருவரும் அவர்கள் போட்டியிட்ட பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் மனுக்களை இருவரும் வாபஸ் பெறாததால் திமுக பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு திமுக தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர் எஸ் பாரதி கூறுகையில் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் தங்கள் மனுக்களை வாபஸ் பெறும் காலம் முடிந்தும் அவர்கள் இருவரும் வாபஸ் பெறவில்லை மனுக்களை வாபஸ் பெறாததால் இரு பதவிகளும் போட்டியின்றி நிரம்புவது உறுதியாகிவிட்டது. நாளை திமுக பொதுக்குழுவில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிடுவார் என்றார் ஆர்.எஸ்.பாரதி.
மதுரையில் சனிக்கிழமை மு.க.அழகிரி கப்சா செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கே: கருணாநிதி இரங்கல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருவது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: நான் திமுகவில் இல்லை. என்னை உள்ளேயே விடல, அதனால், இதுகுறித்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.
கே: செப்டம்பர் 5 ஆம் தேதி நீங்கள் நடத்தவிருக்கும் பேரணி திமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பாக இருக்குமா?
ப: அந்த வேலைக்கு நான் சரிப்படுவேனா என நீங்கள் அவர்களிடம் (திமுக) தான் கேட்க வேண்டும்.
கே: பேரணியால் திமுகவுக்கு ஆபத்து இருக்குமா?
ப: நிச்சயமாக இருக்கும். கருணா காவேரியிலும் ஜெயா அப்பல்லோவிலும் இருந்ததுபோல் திமுக வும் ஐசியூவில் போய் படுத்துக் கொள்ளும்.
கே: இனிமேல் திமுகவில் தலைமைப் பதவியை யார் ஏற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
ப: நான் நான் நானேதான். திமுகவில் இருந்தால் தான் முடியும். திமுகவுக்கு வெளியே இருந்து அதனை சொல்லக் கூடாது. இப்போது அது அவர்களின் கட்சி. விரைவில் என் சொத்தாகும். அவர்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்தான் தலைவராக இருக்க முடியும். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. தலைவர் (கலைஞர்) இருக்கும் போதே நான் தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. அவசர அவசரமாக ஸ்டாலின் தலைமைப் பதவியை ஏற்கிறார். அதனை அவர் சிந்திக்க வேண்டும். என்னை போரில் சந்திக்க வேண்டும்.
கே: திருமங்கலம் ஃபார்முலா காலாவதியாகிவிட்டது, திமுகவில் உங்களின் கனவு பூட்டப்பட்டு விட்டது என அமைச்சர் உதயகுமார் கூறியிருக்கிறாரே?
ப: திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன என்பதை அவர் முதலில் சொல்லட்டும். என்னவென்று தெரியாமலேயே உளறுகிறார் என நினைக்கிறேன். இப்ப ஆர்.கே. நகர் பார்முலா வந்துவிட்டது. தினகரனுக்கு நன்றி! இதனால் செலவு கம்மி.
கே: திமுகவும் அதிமுகவும் ரகசியக் கூட்டணி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறதே?
ப: காலம் காலமாக அப்படித்தான். பொலிட்டிக்கலி எனிமிஸ் ஆனால் பிசினஸ் பார்ட்னர்ஸ்.
கே: உங்களுக்கான கதவுகள் திமுகவில் அடைக்கப்பட்டு விட்டதால், அதை திறப்பதற்கான முயற்சியாக தொண்டர்களைச் சந்திப்பதாக அமைச்சர் உதயகுமார் கூறியிருக்கிறாரே?
ப: அதனால் என்ன தவறு இருக்கிறது? தகப்பன்கழகம் தானே அது. கலைஞர், அண்ணா வளர்த்த கழகம் இது. அதில் ஸ்டாலினின் அண்ணன் நான் சேருவதில் என்ன தவறு உள்ளது?
கே: உங்களை திமுகவில் இணைத்தால் யாரை தலைவராக முன்மொழிவீர்கள்?
ப: வரும் 28 ஆம் தேதி அவர்கள் ஏற்கெனவே தலைவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். பேரணிக்குப் பிறகு தமிழ்நாட்டு மக்கள் என்னை எப்படி காமெடியாக பார்ப்பார்கள் என்பதை பார்ப்பீர்கள்.
கே: உங்களை கட்சியில் சேர்க்காமல் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் நடந்தால் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
ப: ஏற்கெனவே எப்படி இருந்தது தெரியாதா? 2014-லிருந்து ஒரு தேர்தலிலும் திமுக வென்றதில்லை. அதற்கு செயல்படாத தலைவர் ஸ்டாலின் காரணம்.
இவ்வாறு மு.க.அழகிரி கண்ணீருடன் தெரிவித்தார்.
கலைஞர் கருணாநிதி மகனாக இல்லாமல் இருந்திருந்தால் இவர் மத்திய அமைச்சராக இருந்திருக்க முடியாது என்பதை மறந்துவிட்டு ஏதோதோ கூறிவிட்டு புலம்புகிறார். கருணாநிதியுடன் இணைந்து கோபாலபுரத்தில் இருந்த ஸ்டாலின், குடும்பம் மற்றும் கட்சியின் நெளிவு சுளிவுகளில் அத்துப்படியுடன் உள்ளார். சரியான நேரத்தில் காயை நகற்றி அழகிரி ஓரம் கட்டப்பட்டார். அவிழ்க்கமுடியாத முடுச்சும் உள்ளது. ஸ்டாலின் அவர்களுக்கு மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது மூட்டைப்பூச்சி கூட்டத்தை மெத்தைக்குக் கீழே வைப்பதற்கு ஒப்பாகும். கட்சியில் சேர்க்காமல் அவரை எதிர்த்து களமாடுவதே அவர் எதிர் காலத்திற்கு நல்லது.அழகிரி இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 5ஆம் நாள் பேரணி நடத்துவார். தான் மட்டும் பேரணியில் செல்லும் நிலை ஏற்படும். என்றார் ஒரு திமுக உ.பி.