இந்து கோவில் சொத்துக்களை மீட்கவும், கோவில் சொத்துகளுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படாததை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஒருநாள் ஹெச்.ராஜா தலைமையில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. அதில், பாஜக ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

அந்த போட்டத்தில் கலந்து கொண்ட விசு, இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஹெச்.ராஜா என புகழ்ந்து பேசினார். இந்த விவகாரத்தை கையிலெடுத்த பலரும் விசுவுக்கு எதிராக மீம்ஸ்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அவர்களை எதிர்த்து பாஜக ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்க அவர்களிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் இளைஞர்களை ராஜாவுக்கு கொடுங்கள் இந்துமதத்தையும் இந்துக்களையும் அவர் காப்பாற்றிவிடுவார் என்று பேசினார்கள். 999 இளைஞர்களைக் கொடுங்கள் மீதமுள்ள ஒருவனாக ராஜாவின் காலடியில் நான் வீழ்வதற்குத் தயார். கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக அரட்டை அரங்கம் நடத்த ஊர் ஊராய் சென்று பிச்சை எடுத்தேன். அங்கு பல பேச்சாற்றல் மிக்க அராத்துக்களை கண்டுபிடித்துள்ளேன்.

மெட்ராஸ் பிஜேபி பற்றி சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும். அது மசால்வடைக்கு பகல் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்கிரம அசிங்கபுரத்துக்கு அருகில் என்னுடைய ‘கொல’ தெய்வம் உள்ளது. 60 வயது ஆனப்புறம் அங்கு சென்றபோது ஒரு அம்மா கோவில் நிலங்களை எல்லாம் வளைச்சுப் போட சொன்னார்கள். அதற்கு ராஜா போன்ற ஆட்கள் தான் சரி.

எனது சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். அதற்கு நேரடியாக பிரத மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணம் பெற்றுத் தர எச். ராஜா தயவு வேண்டும். அதற்கு தான் இந்த பித்தலாட்ட பீத்தல் பேச்சு பேசினேன்.

டயாலிசிசிற்கு வழி செய்துவிட்டால் மிச்ச காலத்தையும் எச். ராஜாவின் பாதங்களை கழுவி கழித்துவிடுவேன். இவ்வாறு வயோதிகத்தால் மரை கழன்ற இயக்குனர் விசு பேசினார்.

22 வருடங்கள் சன் டிவியின் செலவில் தமிழகமெங்கும் சுற்றி இவர் கண்டெடுத்த பேச்சாளர்களை எச் ராஜாவிடம் கொடுப்பாராம். கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாக அல்லவா இருக்கிறது. “அரட்டை அரங்கம்”சாதி மதத்திற்கு அப்பாற் பட்டது.ஆனால் அதை மதவாதத்துக்கு பயன்படுத்தி ஆதாயம் தேட நினைக்கும் விசுவின் முகத்திரை கிழிந்தது.பொதுமக்களே உஷார்! வயது ஆகிவிட்டது புத்தி பேதலித்து போய்விட்டது. என எச்சரிக்கிறார் உங்கள் நியூஸ் கப்சா நிருபர்.

பகிர்